பல மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் வலைப்பூவில் பதிவுகளிட தொடங்குகிறேன். முன்பில்லாததைவிட தற்போது அதிக நேரமிருப்பது ஒரு முக்கிய காரணம்.
நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவின் காரணமாக, மீண்டும் எங்கள் பகுதியில் "உள்ளே இரு" எனும் போலீஸ் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேறு வழியில்லை, நமது பாதுகாப்பு கருதி கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள வீட்டிலேயே இருந்திடவேண்டியதுதான்.
இந்த அரிய சந்தர்ப்பத்தில் மனதில் படுவதை பதிவிலிட ஒரு ஆர்வம் பிறந்திருக்கிறது... பார்ப்போம் பிறகு...
Wednesday, 5 May 2021
மீண்டும் பதிவுகள்...
Friday, 4 December 2020
சாபம் பலிக்குமா?
நல்லவங்கள வம்புக்கு இழுக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஏன்னா, அவர்களின் கோபம் நமது முன்னேற்றத்தை தடுக்கும்னு ஒரு நம்பிக்கை.
சரி, நல்லவங்கன்னு எப்படி கண்டுகொள்வது?
தானுண்டு தங்கள் வேலையுண்டுன்னு யார் வம்புக்கு போகாம, ஒதுங்கி அமைதியா வாழ்பவர்களை இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
இவர்கள் மனமகிழ்ந்து வாழ்த்தினாலும் பலிக்கும், அவங்க மனம் நொந்து சாபமிட்டாலும் அது பலிக்கும்.
இதுல லாஜிக் உண்டா?
இதுக்கு குண்டக்க மண்டக்க மாதிரி ஒரு கேள்வி....
ஆசிர்வாதம் பெறும்போது தலைவணங்கி புன்னகையோடு ஏற்றுக்கொள்கிறோமே, அப்போ அதுக்கு ஈக்குவளாகவும், ஆப்போஸிட்டாகவும் நிர்பந்தமான செயல்வடிவம் தரும் சாபத்துக்கு உள்ள சக்தியையும் நம்பித்தானே ஆகணும்???
Thursday, 18 April 2019
கேமரன் மலையில் ஒருநாள்...
கேமரன் மலை அல்லது கேமரன் ஹைலண்ட்ஸ், மலேசியாவில் குளிரான பகுதி. ஓய்வில் என் மனைவியுடன் நான் வந்து தங்கி இருந்த சில நாட்களில் 13 டிகிரிஸ் செல்ஸியஸ் வரை குளிரை அனுபவித்திருக்கிறோம். சில நாட்களில் இன்னமும் குறையும் என அங்குள்ளோர் பேசிக்கொள்கிறார்கள்.
மதிய நேர சூரிய ஒளி சற்று கதகதப்பை தருவது ஆறுதலளிக்கிறது.
படங்கள் : நண்பர் தர்மதுரை, பட்டர்வொர்த்.
மதிய நேர சூரிய ஒளி சற்று கதகதப்பை தருவது ஆறுதலளிக்கிறது.
படங்கள் : நண்பர் தர்மதுரை, பட்டர்வொர்த்.
கையில் கிடைத்தவை, ஏப்ரல் 2019
நமது தேசிய மலைத்தொடரோடு ஒட்டிய இருபக்க வழிப்பாதைகளில் பலரும் மேற்கு பகுதியில்தான் பயணம் செய்திருப்போம். கிளந்தான், திரெங்கானு போன்ற மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் நம் சமூகத்தினர் அனுபவம் குறைவுதான்.
அதிவிரைவு ரயில் திட்டமொன்று தற்போது பெருமளவு பேசப்பட்டு வருகிறது. போர்ட் கிள்ளானில் இருந்து கோத்தாபாரு வரை திட்டமிடப்பட்டிருக்கும் அது நடைமுறைக்கு வரும்போது சுற்றுப்பிரயாணங்கள் மட்டுமல்ல வணிக வளர்ச்சிகளும் கண்முன்னே தெரியும்.
படம்: கம்பர், பேராக் அருகே அழகான ஒரு காட்சி...
Tuesday, 16 April 2019
பிரபு ...
வழக்கமான நட்புகளையும், உறவுகளையும் பார்த்துப் பழகிடும் நேரம், புதிய உத்வேகத்துடன் ஒருவர் நெருங்கிய உறவினைப் போல நம்முடன் வந்திணைவது எவ்வளவு பெரிய விசயம்.
கடந்த மார்ச் மாதத்தில் ஒருநாள் அப்படி வந்து நம்மோடு இணைத்துக் கொண்டவர், எல்லோராலும் மகனே, மருமகனே, மாப்பிள்ளையே என செல்லமாக அழைக்கப்படும் பிரபு அவர்கள்.
முகநூலில் நட்பாக துவங்கியது இந்த உறவு. அதுவும், எனது மற்றொரு நெருங்கிய உறவான வில்சனின் அறிமுகத்தில்தான் இவரை எனது பக்கத்தில் இணைத்துக் கொண்டேன்.
தொடர்ந்த சில வாரங்களில், மாதங்களில் இவரின் நல்ல மனமும், குணமும் தெரியத் தொடங்கியது.
அது, பின் அவர் இங்கு மலேசியா வந்து செல்லுவதற்கு காரணமாகவும் அமைந்துவிட்டது.
அவருடன் எடுத்துக் கொண்ட படங்கள் இங்கே....
இன்னும் வரும்...
Sunday, 26 August 2018
புளோரியா புத்ராஜெயா 2018
சுமார் பத்தாண்டுகளாக மலேசியாவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு நிகழ்வாக இருந்து வந்த புத்ராஜெயா மலர்கண்காட்சி, ஓராண்டுக்குப் பின் மீண்டும் இடம்பெறுகிறது.
நேற்று, சனிக்கிழமை முதல் எதிர்வரும் செப்டெம்பர் 2ம் தேதி வரையில் புத்ராஜெயா பிரிசின்க்ட் 4ல், தாவரவியல் சம்பந்தமான பயிரினங்களையும், மலர்த்தோட்டங்களையும், வெவ்வேறு நாடுகளின் மலர் அலங்காரங்களையும் கண்டு களிக்கலாம்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற எல்லா மலர்க்கண்காட்சிகளிலும் கலந்து கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் நண்பர்களுக்கு ஒன்றைச் சொல்வேன்.... கண்களுக்கு குளிர்ச்சியாக, மனதுக்கு இதமாக, கவர்ந்திழுக்கும் வண்ணக்குவியல்கள் போன்ற மலர்களில் மிதக்க ஓடி வாருங்கள். இது வருடத்துக்கு ஒருமுறையே வரும் சந்தர்ப்பம்.
2017ல் இந்நிகழ்வு இடம்பெறவில்லை. கடந்த அரசு அதற்கு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டியது. இன்றைய அரசோ, தேசிய தினத்தையே புத்ராஜெயாவில் கொண்டாட திட்டம் வகுத்து அதற்கேற்றார்ப்போல் மலேசியர்கள் பலரையும் கவரும் இந்த மலர்க்கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறது.
2016ல் இடம்பெற்ற நிகழ்வின்போது பிடித்த படங்களில் சில இங்கே.
இவ்வருடத்திய படங்கள் நாளை முதல் இடம்பெறும்.....

Subscribe to:
Posts (Atom)