Wednesday, 18 June 2014
Tuesday, 17 June 2014
ஃப்ளோரியா 2014 டபுள்ஸ்...
இரட்டை வேடப் படங்கள் எடுக்க எனக்கு மிகவும் பிடித்தமானது, புத்ராஜயா மலர்கண்காட்சி. பலவித செட்டுக்கள் அங்கே இருப்பதைக் காணலாம். நம் மனதுக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் படங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
ஆட்கள் பலர் மத்தியில் இப்படி இரண்டு வெவ்வேறு மாதிரி நிற்க ஒரு மாதிரியாக இருப்பதாகச் சொல்லி மறுப்பவர்கள் பலர். ஆயினும், கையில் தயார் நிலையில் இருக்கும் ஏற்கனவே எடுத்த பட ஆல்பத்தைப் பார்த்த பின் முன் பின் பழக்கமில்லாதவர்கள் கூட தங்களுக்கும் எடுத்துக்கொடுக்க கேட்பதுண்டு.
பார்த்த மாத்திரத்திலேயே முகத்தில் புன்னகை தவழச் செய்யும் இதுபோன்ற படங்களை எடுத்தருவதில் நானும் மகிழ்ச்சியடைகிறேன்.
" எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி
வேறொன்றறியேன் பராபரமே!!!"
இன்னும் வரும்....
Subscribe to:
Posts (Atom)


























































