Sunday, 23 September 2012

சம்பாதிப்பதும் சேமிப்பதும்...

கை நிறைய சம்பாதித்தாலும் அளவோடு செலவுகள் செய்து நிம்மதியாக வாழ்வது வாழ்வில் வெற்றிபெற்றோரின் ரகசியமாக இருந்து வருகிறது. இதை ரகசியம் என்று சொல்வதை விட அவர்களின் கட்டுப்பாடான வாழ்க்கை முறை என்றுதான் சொல்லவேண்டும். சாதாரணமானவர்களும் சிறப்பு பெருவது இந்த சின்ன வித்தியாசத்தால் தான்.

ஆயிரம் வெள்ளியை   உடனே  செலவு செய்ய அனைவருக்கும் தெரியும். ஆனால், அதில் ஒரு நூறு வெள்ளியை சேமிக்கச்சொன்னால் பல மணி நேரம் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். சேமிப்பு என்பது மிகவும் சிக்கலான ஒன்று. இதற்கு தனித்திறன் வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டு மக்களுக்காக அரசாங்கம் போடும் பட்ஜெட் போலவே, ஒவ்வொரு வீட்டிலேயும் குடும்ப பட்ஜெட் போடப்பட வேண்டும். இது மாதாந்திர பட்ஜெட்டாக இருந்தால் பண விரயத்தைக் கண்டுபிடிப்பது இன்னும் சுலபமாகும் குடும்பத் தலைவருக்கு.

ஒரு சராசரி குடும்பத்தின் மாதச் செலவுகள் எப்படி இருக்கும்?

1    மளிகை
2    மீன், இறைச்சி,கோழி மற்றும்  காய்கறி
3    வீட்டு தொலைபேசி   மற்றும்  கைபேசி
4    கரண்ட் பில்
5    தண்ணீர் பில்
6    வாகணங்களுக்கான பெட்ரோல்
7    ஆஸ்ட்ரோ
8    இன்டெர்னெட்
9    மாதந்திர காப்புறுதி பிரிமியம்
10   கார்    மற்றும்  பைக் போன்றவற்றுக்கான மாதாந்திர கட்டணம்
11   வீட்டுக்கான   மாதாந்திர  கட்டணம்

என இன்னும் எத்தனை எத்தனையோ...?

இதுபோன்ற செலவுகளுக்கு ஈடுகொடுத்து பணம் சம்பாதிக்கவேண்டிய நிர்பந்தம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உண்டு. சில குடும்பங்களில் மனைவியும் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டுகிறார். இதனால் கணவரின் சுமை கொஞ்சம் குறைகிறது.

இப்படி கஷ்ட்டப்பட்டு சம்பாதிப்பதை மிகச் சாதாரணமாக செலவுகள் செய்து இழந்துவிடலாமா? எவ்வளவு சிரமங்களுக்கிடையே உழைத்து சம்பளமாக நாம் பெற்ற பணம் இது. சிரத்தையுடன் அல்லவா செலவு செய்ய வேண்டும். முப்பது நாட்கள் காத்திருந்து பெற்று வந்த பணத்தை மூன்றே நாட்களில் அனாவசியச் செலவுகளில் செலவிடுவது சிறந்த ஒன்றா என்ன?

சம்பாதித்த பணத்தை சேர்த்து வைக்க நிச்சயம் ஒரு புத்திசாளியால் மட்டுமே முடியுமென்று அன்று பெரியோர் சொல்லி வைத்தனர்.

பலர் பணம் சம்பாதிப்பதெப்படி என தெரிந்து வைத்துள்ளனர்.  கடுமையான உழைப்பாளிகளான இவர்கள் சோம்பலின்றி பணம் சம்பாதிக்கிறார்கள். ஒருவேலைக்கு இரு வேலைகளாக செய்து அங்கும் இங்கும் ஓடிச் சென்று பொருள் ஈட்டுகிறார்கள். ஆனால், அந்தப் பணத்தின் மதிப்பினை சரிவர உணராமல் இருக்கிறார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் பிள்ளைகளும் பணத்தின் அருமை பெருமைகளையும், முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்வது அவசியமாகும். அவற்றோடு பணத்தை சேமிக்கும் விதங்களையும் பெரியோர் பிள்ளைகளுக்கு சொல்லித்தருவது எதிர்காலத்தில் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்திக்கொள்ளும் ரகசியத்தை    சொல்லித்தருவது  போலாகும்.

சில மாதங்களுக்கு முன் ஒருநாள், காப்புறுதியின் அவசியம் பற்றி குழுமியிருந்த சில இளைஞர்களிடையே பேசிக்கொன்டிருந்தேன். இடையே, பணத்தை செலவழிக்கும் வழிகள் பற்றி வினவினேன். எல்லோரும் கைகளை உயர்த்தி பல காரணங்களைத் தந்தனர். ஆனால், பணத்தை வளரச்செய்யும் வழிகள் பற்றி கேட்டபோது 'பிஸினஸ், ஷேர் மார்க்கெட்' என சிலவற்றை மட்டுமே சொல்ல முடிந்தது.  அதிலும் இவை பாதுகாப்பான முதலீடுகள் செய்யும் விதங்கள் அல்ல.

இளைஞர்கள் என்பதால் இன்னும் காலம் கடந்து விடவில்லைதான். ஆனால், உழைத்துக் கொண்டுவரும் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யாது அப்பணத்தினை சரியான முறையில் வளர்க்கும் ஆற்றலையும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

பல குடும்பங்களில் படிப்பைப் பற்றி தினமும் பேசுகிறார்கள். பணத்தினைப் பற்றிய நல்ல விசயங்களையும் அவ்வப்போது குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் சொல்லி வர வேண்டும்.

பணத்தின் மதிப்பு எப்படி உயருகிறது என சொல்லித்தரும்போது, அதை மதிக்கும் குணமும் பிள்ளைகளுக்குள் வளர்வதை பெற்றோர் உறுதி செய்யவேண்டும்.

Monday, 17 September 2012

MGR movie stills...










கே. கே. பாலனும் கே. கே. பி. ஷெலன்ட்ரியும். . .


சிலருக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. என்னதான்  அழகாக இருந்தாலும், கேமரா முன் வர வெட்கப்படுவோர் இருக்கவே செய்கிறார்கள்.

இங்கே நான் புகைப்படம் எடுப்பதை தடுப்பவர்...ஷெலன்ட்ரி பாலன். ( அப்போ தூக்கி வளர்த்த குழந்தைங்க இப்போ தூக்க முடியாத அளவுக்கு வளர்ந்துட்டாங்க..)



எப்போதும் சிரித்தபடி இருக்க ஒரு சிலராலேயே முடியும்.

எனது அருமை நண்பர் திரு பாலன், என்றென்றும் புன்னகையுடனே இருக்கும் சிலரில் ஒருவர். அவருடனான "சிந்தனைகளும் சாதனைகளும்" எனும்  நேர்காணலின்  போது எடுத்த புகைப்படம் இது.

லேடி ஒஃப் ஷெல்லோ. . .


 நம்மைப் போன்று  பலவழிகளில் வேறுபாடுகள் கொண்டவர்களே மேலை நாட்டினரும்...

தீண்டத் தகாதவள் என முத்திரை இடப்பட்டு தன் உயிரை தானே போக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் கடைசியில் ஒரு பெண். 1833ல் இயற்றப்பட்ட, மிகவும் புகழ்பெற்ற ஒரு இத்தாலிய கவிதையின் சித்திரம்.

Monday, 3 September 2012

பட்டாம்பூச்சி / PAPPILON



"படிக்க சுவாரஸ்யமான புத்தகம் ஒன்றை சொல்லுங்களேன்"  என என்னிடம் வருவோருக்கு நான் பரிந்துரை செய்யும் பத்து நாவல்களில் ஒன்று இது.

Saturday, 1 September 2012

திருமணமானவர்களுக்கு ( மட்டுமல்ல... )

- திருமண கவுன்சிலர் ஐயா அ. ராமதாஸ்

வழக்கமான, படிக்கவே கூசுகின்ற அடுத்தவருடனான கள்ளத்தொடர்பில் முறியும் திருமணங்களைத் தவிர்த்து, ஞாயமான, "தவிர்க்கப்பட்டிருக்கலாமோ?" எனும் எண்ணத்தில், சிதறும் திருமணங்களுக்கான காரணங்களை இங்கு பார்ப்போம். இவை சாதாரணமாக தோன்றினாலும் விவாகரத்துக்கு அடிப்படை காரணங்களாக அமைவதாகும்...

#     புதிதாய் வரும் மனைவிக்காகவோ, கணவருக்காகவோ பல ஆண்டுகள் பழகி வரும் நம் நல்ல நண்பர்களையும் ஒரு எல்லைக்குள் கொண்டுவந்துவிடுகிறோம். இது நமது நண்பர்களை அன்னியர் ஆக்கிவிட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது.
இதுவரை வாழ்ந்தது நம் வாழ்வின் ஒரு பகுதிமட்டுமே. இனி வாழப்போவதுதான் அதன் முக்கியப்பகுதியே. எனவே, நண்பவர்களை நண்பர்களாகவே நிறுத்திவிடவேண்டும். இது நல்ல நண்பர்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய ஒன்று. வார்த்தைகளில் சொல்லாமல் நமது புத்திசாளித்தன சொல்களால் மென்மையாக காட்டிக்கொள்ளலாம். இதை ஏற்க மறுப்பவர்கள் நம் நல்ல நண்பர்களாக நிச்சயம் இருக்க முடியாது.

#     நமது நண்பர்களால் நல்லதும் நடக்கும், சில நேரங்களில் எதிர்பாராவிதமாக சிரமங்களும் தோன்றும். சிரமங்கள் எனும்போது பொதுவாகவே, கடனாக வாங்கும் பணம் காரணமாகவும், இரவல் வாங்கும் பொருட்களினாலும் பிரச்சினைகள் தோன்றும். நண்பர்கள் என்பதால் உதவுவது நம் கடமைதான் என்றாலும், கணவனும் மனைவியும் கலந்து பேசிய பின்னரே அந்த உதவியைச் செய்யவேண்டும். ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் தன்னிச்சையாக உதவி எனும் பெயரில் செய்யும் எதுவும் குடும்ப உறவுக்கு நல்லதொன்றாக அமையாது.

#     புதிதாக மணம் புரிந்துகொள்ளும் தம்பதிகளுக்கு ஒன்றைச் சொல்வேன்.
குடும்பதிற்கான செலவுகளை எவ்வளவு செய்தாலும் தவறில்லை. செய்யும் எல்லா செலவுகளையும் ஒரு புத்தகத்தில் எழுதி வைத்து மாத இறுதியில் இருவருமாக சேர்ந்து சரிபார்ப்பது நல்லது. ஆச்சரியப் படும் விதமாக அடுத்தடுத்த மாத செலவுகள் குறைந்து விடும். கையில் பணம் மீதப்படும்போது குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் தானே  கூடிவிடும்.

#     திருமணத்தின் போது இருவரும் எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. படித்தவர்களாகவும்  இருக்கலாம்,  படிக்காதவர்களாகவும் இருக்கலாம். வாழ்வில் இணைவதற்கு படிப்பு ஒரு தடைக்கல்  அல்ல. ஆனால் திருமணத்திற்குப் பின் இருவரும்  படிக்கத் தொடங்குவது  அவசியம். பள்ளிப் படிப்பை இங்கு நான் சொல்லவில்லை. ஏதாவதொரு நல்ல புத்தகத்தை தினமும் கொஞ்சமாவது படிப்பது பின் காலத்தில்  குடும்ப முன்னேற்றத்துக்கு  பெரும் பங்காற்றும். தினமும்  படிப்பவர்கள் சிந்தனையில் பக்குவப் படுகிறார்கள். பக்குவப்படும் சிந்தனை நம்மை வளமான பல வழிகளில் செயல்படச் செய்கிறது.

#     எப்படித்தான் காலம் வேகமாக உருண்டோடினாலும் வீட்டுச் சமையல் இன்னும் பெண்கள் கைகளிலேயே இருக்கிறது. எனவே திருமணமாகும் பெண்களுக்கு சமையல் தெரிந்திருப்பது கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவை வலு சேர்க்கும் ஒன்றாகும். வீட்டில் இருக்கும் மற்றவர் சமைப்பதும், சமையலுக்கென உதவியாளரை வைத்துக்கொள்வதும் தவறில்லை. ஆனால், எப்போது ஒரு பெண் தன் கணவன் திருப்தி படும்படியாக சமைத்துப் பறிமாறுகிறாளோ அப்போதுதான் அவள் ஒரு மனைவி எனும் அந்தஸ்துக்கு தகுதி பெறுகிறாள். இது எழுதப்படாத உண்மை.

#     என்னதான் வீட்டில் பூஜை அறையில் தியானம் செய்தாலும், குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை அருகில் இருக்கும் கோயிலுக்கு வாழ்க்கைத் துணையுடன் சென்று வருவது இறையருளைப் பெரும் சீரிய அம்சமாகும்.  பலருக்கு சினிமா, பீச், பார்ட்டி, கடைத்தெரு என போவதற்கு நிறைய நேரம் இருக்கும். ஆனால், கோயிலுக்குப் போக கூச்சப்படுவர். இது தவறு. தம்பதி சமையதராக கோயிலுக்குச் செல்வது பல பாக்கியங்களை அடையும் ஒரு குறுக்கு வழியாகும்.

#     இதுமட்டுமல்ல, இதுவரை எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தனியே சென்று வந்த ஆண்களும், திருமணமான பின் தங்கள் மனவிமார்களுடன் சென்று கலந்துகொள்வது இருவருக்கும் இடையே இருக்கும் பரஸ்பர அன்பினை பன்மடங்கு வளரச் செய்யும்.

( பல இன மக்கள் வாழும் நம் நாட்டில் நம் சமூகத்தினரிடையே ஏற்படும் அதிக அளவிலான திருமண முறிவுகளை தவிர்க்கும் வழிகள் பற்றி வினவினேன். 'பொஸிட்டிவ்வாக' அவர் கூறிய குறைகள் இவை. )