Sunday, 15 April 2012

எதிர்வீட்டு நண்பர் பழனி . . .

எதிர்வீட்டு நண்பர் பழனியின் குடும்பத்தினர் படங்களை இன்றைய பதிவில் இடம்பெறச்செய்திருக்கிறேன்.

சினேகன் எனபது அவரின் 8 மாதக் குழந்தையின் பெயர். ஒவ்வொரு முறையும் இவர் அழுகின்ற போது நல்ல நல்ல தாலாட்டுப் பாடல்கள் அவர்கள் வீட்டிலிருந்து காற்றோடு காற்றாக எங்களுக்கும் கேட்கும். சீடிக்களில் அவ்வகை தாலாட்டுகள் இருந்தாலும், அவர்கள் வீட்டில் யாராவது ஒருவர் அழும் குழந்தையை சாந்தப் படுத்த பாடுவார்கள்.

"காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே..
காலம் இதைத்  தவற விட்டால்
தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே"

"கண்ணே ராஜா கவலை வேண்டாம்
அப்பா வருவார் தூங்கு...."

"அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா..."

போன்ற அருமையான தாலாட்டுப் பாடல்கள் அவர்களின் சீடியில் இருக்கும் என்று நினைக்கிறேன். அடிக்கடி இதுபோன்ற பாடல்கள் அவர்களின் ஒலிபரப்பில் இடம்பெறும்.

மூவினங்களும் குடியிருக்கும் தாமான் போன்ற இடங்களில் அண்டை அயலாரிடம்  நல்லிணக்கத்தோடு பழகிவருவதே சிறப்பு. அதிலும் நம்மவர்கள் அருகில் வசித்தால், இன்னும் சற்று கவனம் செலுத்தி அவர்களோடு நட்புறவுடன் வாழ்வதே நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும்.

அப்படியொரு நல்ல குடும்பத்தினரின் புகைப்படங்களை இங்கே என் பதிவில் போடுவதில் எனக்கும் மகிழ்ச்சியே....













Saturday, 14 April 2012

ஜுக்ரா மலை. . .

திருச்சியிலிருந்து வந்திருந்த அண்ணன் சந்திரசேகரன் அவர்களை பந்திங் வட்டாரத்தில் புகழ்பெற்ற ஜுக்ரா மலையை சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்றிருந்தோம் நானும் என்னுடைய அந்நாளைய பக்கத்துவீட்டு நண்பர்களான மோகனும், தயாளனும்.

இரட்டைவேட படங்கள் சில அங்கே எடுப்பது என்றும் முடிவு செய்தோம்.


போகும்பாதை நீண்டு கொண்டு போவதை பார்த்து பிரமித்த அண்ணனை,

 "கவலைப்படாதீர்கள், அங்கிருக்கும் மலை உச்சியிலிருந்து கீழே பார்த்தால் காட்சிகள் அழகாய் தெரியும்"

என சற்று மிகைப்படுத்திச்  சொல்லியே கூட்டிச் சென்றோம்.


எங்களுக்கு பின்னால் தெரிவது பழங்கால சீனர்களின் இடுகாடாகும். அவர்களின் இடுகாடு எப்போதும் உயரமான மலை மேல்  இருப்பதை கவனித்தீர்களா...?


இரட்டைவேட புகைப்படங்கள் எடுப்பதற்கு முயற்சியும், பயிற்சியும் தேவை.

அதுமட்டுமல்ல, ஒரு வித்தியாசமான காட்சியமைப்பு வேண்டும். இல்லையேல் எடுக்கப்படும் படம் வெட்டி ஒட்டப்பதைப் போல சாதாரணமாகிவிடும்.

சில நேரங்களில் சுற்றி இருப்போர் ஒரு நாடக படப்பிடிப்பை பார்ப்பதைப் போல  கூடிவிடுவர்.

தமிழக மெரினா பீச்சில் இதுபோன்று "டபுல் எக்க்ஷன்" புகைப்படங்கள் எடுக்கும்போது  பலரும் கவனிக்க தொடங்கிவிட்டனர். 

ஒருவேளை, நான் கைகளை நீட்டி உத்தரவுகளை பிறப்பிக்கும் "பந்தா"வினால் இருக்குமோ என்னவோ. ஆனால் இரட்டை வேட படங்கள் எடுப்பதற்கு  நான் கூச்சப்படுவதில்லை. காரணம், இது போன்ற புகைப்படங்களை எடுக்கும் நேரம் கூட்டத்தினருக்கும் தெரியும் மாறுபட்ட கோணங்களில் படங்கள் எடுக்கப்படுவது

என்னுடைய படங்கள் இயற்கையாகவே ஒருவரே இருவராக இருப்பது போன்றே இருக்கும்.



காட்சியமைப்பு ஒன்றினை   திருச்சி அண்ணனுக்கு விளக்குகிறேன்.



"அட ஆமாம் தம்பி, ரொம்ப நல்லா இருக்கே" என தனது கேமராவில் படமெடுக்கிறார் அண்ணன்.



மலை உச்சியில் படங்களை எடுத்து முடித்தபின் அடிவாரத்தில் இருக்கும் ஆற்றோரத்து அழகை ரசிக்க வந்திருக்கிறோம்.

இந்த ஆற்றின் வழி பல நீண்ட இயந்திரப் படகுகளில்  மோரிப் கடலில் நின்றிருக்கும் கப்பல்களிலிருந்து பொருட்களை கிள்ளான் துறைமுகத்துக்கு கொண்டு செல்வர்.




இதுவரை எடுத்த காட்சிகளை தனது புகைப்படக் கருவியில் பார்த்து ரசிக்கிறார் திருச்சி அண்ணன்.

  
நாங்கள் வந்திருக்கும் இன்று எந்த ஒரு பெரிய படகுகளும் போகக் காணோம். இப்படிச் சில மட்டுமே போய் வந்தன. ஒருவேளை "ஸ்ட்ரைக்"காக இருக்குமோ...? 

சாமி .... பெரியசாமி. . .

வெற்றிலை வியாபாரத்தை உப தொழிலாக செய்து வரும் திரு. பெரியசாமி தான் இன்றைய பதிவில் இடம் பெறுகிறார்.



Thursday, 12 April 2012

ING news


.
 

Plan for the future...

Wednesday, 11 April 2012

'பாவ்'வும் பழமும். . .

நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டிய ஒன்று.

சிரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படச்செய்யும் ஒன்றையே நாம் நகைச்சுவை ஊணர்வென்கிறோம்.

உண்மையில் இது ஒரு வரம்...காரணம் எல்லோரும் இப்படிப் பிறப்பதில்லை.
 சிலர் "அப்படியென்றால் என்ன?" என்றுகூட கேட்பார்கள்.


(சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது, "அறிவியல் உலக விந்தைகள்" எனும் ஒருகாட்சியகத்தில் எடுத்த படம் இது. மற்றவர் விசயங்களில் மூக்கை நுழைத்தால் தான் தவறு. அவர்கள் சிரித்து மகிழ தலையை நுழைத்து காமிடி பண்ணுவது தவறில்லை எனப் பட்டது.

 இங்கே நீங்கள் பார்ப்பது கண்ணாடியினால் ஆன ஒரு மேஜை.அதில் சில பழங்கள். பழங்களுக்கு நடுவே உங்கள் தலையை நுழைக்க சின்னதாய் ஒரு இடம் . ஆனால், இது பார்வையாளர்களுக்குத் தெரியாது. ரகசியப் பாதைவழி நீங்கள் சென்று இப்படி போஸ் கொடுக்கும் போதுதான் அவர்களுக்கு தெரியும். பலரும் இப்படி படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.)

வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொன்றையும் ரசிக்கப் பழகும்போது மன அழுத்தம் குறைகிறது. ஆரோக்கியம் கூடுகிறது.

இந்த ரசிப்புத்தன்மைக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மற்றவர்கள் ஜோக் சொல்ல நாம் சிரிக்கலாம்.அது இயல்பானது. ஆனால், எந்த ஒன்றையும் நாமாகவே தெரிந்துக்கொண்டு அதில் உள்ள நண்மைகளை புன்சிரிப்போடு அனுகுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும்.

அப்படிப்பட்டவர்களை நாம் அடிக்கடி பார்க்க விரும்புகிறோம், அவர்கள் சொல்வதை சிறிதாயினும் கேட்டுவைக்கிறோம், அவர்களின் செய்கைகளை கண்டு நம் குறைகளையும் கவலைகளையும் தற்காலிகமாவது மறக்கிறோம்.

வாய் விட்டு சிரிக்கும் பயிற்சி மேலை நாடுகளில் புகழ்பெற்று வருகிறது. தங்களது நோய் விட்டுப் போக பலர் இதில் பங்குபெறுகின்றனர். நோய் தீர மருந்தொன்று வேண்டும் என்பது நிஜம். அந்த மருந்தும் சரிவர நம்முடலில் வேலை செய்ய நகைச்சுவை உணர்வு பெரிதும் உதவுகிறது.

மற்றவர்களைப் பார்த்து ஏளனமாக சிரிக்கவேண்டாம். திரைபடங்களில் வரும் கேலியும் கிண்டலும் நகைச்சுவை உணர்வன்று. அவை ஒரு சாராரை மகிழ்ச்சிப் படுத்தி வேறொரு பகுதியினரை புன்படுத்துகின்றன பல நேரங்களில். 

மற்றவர்கள் செயலில் இருக்கும்  தீயவற்றை ஒதுக்கி நல்லவற்றை ரசிக்கப் பழகுங்கள்.... பின் அவர்களை பாராட்டத் தொடங்கிவிடுவீர்கள்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது தானாக இங்கே அடிபட்டு போய்விடும்.

எந்தச்சூழலிலும் நகைச்சுவையாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சிகரமாக மாற்றியமைத்துக்கொள்ள முடியும். கலகலப்பான நிமிடங்களை நினைத்தமாத்திரத்தில் உருவாக்கிவிட முடியும். இப்படிப்பாட்டோர் இருக்கும் இடம் இன்பத்தால் ஆன நல்லதொரு அனுபவத்தை  அனைவரும்  பெரும் இடமாக இருக்கும்.  இந்த இடமே
சந்தோசமும் நிம்மதியும் கைகோர்க்கும் இடமாகும். இங்கே கவலையும் பிரச்சினையும் எட்டிப் பார்க்கக்கூட முடியாது.

பல சந்தர்ப்பங்களில் நான் எனது குறைகளை நினைத்தே சிரித்துக் கொள்வது உண்டு. இறைவன் எனக்களித்த வரங்களில் எனது தோல்விகளையும் துயரங்களையும் நான் மிகை படுத்திப் பார்க்காமல்  எனது நகைச்சுவை உணர்வை மேம்படுத்திக்கொள்ள உதவியதேயாகும்.

சிலர் இயல்பாக பேசும் போதே நம்மனம் இலேசாகிவிடும். கடும் சொற்கள் அவர்களிடம் இருந்து வராது. அவ்வப்போது ஒரு புன்னகை, சின்னதாக ஒரு காமிடி டயலொக், சமய சந்தர்ப்பதிற்கு ஏற்றாற்போல் சின்ன சின்ன சிரிப்பூட்டும் ஜோக்குகள்.... இப்படி ஒன்றோடிணைந்து ரயில் பெட்டிகளைப்போல் இனிமையும் மகிழ்ச்சியும் தொடர்ந்து கொண்டிருக்கும்.

இது ஆரோக்கியமான ஒன்று.

நமது நகைச்சுவை உணர்வை கிண்டல் பண்ணுவோரும் நம்மிடையே உண்டு. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என நாம் போய்க்கொண்டே இருக்கவேண்டும்.

நமது மனதை அன்போடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள  நகைச்சுவை உணர்வை மேம்படுத்திக் கொள்ளுவோம் வாருங்கள்.

சஸ்பென்ஸ் படங்கள். . .

புகைப்படங்களிலும் சஸ்பென்ஸ் சேர்த்துக்கலாம், கிரியேட்டிவ்  ஐடியா இருந்தா.... 

ரெண்டையும் மறுபடியும் பாருங்க... 

" யார் நீ" போல இல்ல...?



என் கற்பனைக்கு நாடக வடிவம் தந்தது என் மனைவியும் குழந்தைகளும்.

தனபாலன் அண்ணன் வீட்டில் . . .

இங்கே உள்ள புகைப்படங்கள் கடந்த வருடம் எடுக்கப்பட்டவை. வெளியிட கொஞ்சம் தாமதமாகிவிட்டது.