Sunday, 26 February 2012

Floria 2011. . . part 1









































I have uploaded some of the Floria 2011 photos of Flower and Garden show held at Precint 2 last year for those who have missed the opportunity to see them live back then. For last year, the theme was "roses forever..." and in 2010, it was " heliconia special ".

It was a wonderful experience looking at those lovely flowers and plants in a same place in big quantities.  The colours, shapes and sizes were so unique....and captivating the visitors that the visitors were going again and again to admire the amazing show during the two weeks. 

My wife and I were there on the second day morning of the show and had ample time to enjoy the great arrangement of the flower plants. However, when we went there again for the second and third time, we were not that lucky for the fact that by then people from all over Malaysia had started flocking the place and we had to wait for our turn to get into some halls to see foreign countries' arrangements.

It was more of a festive atmosphere than a flower show. Some families came prepared and set up camping like floormats to stay for a day.

One sad thing though was the lack of interest among our Indians. They like flowers and gardens, no doubt about that....but to come to the show and participate, they hesitate.

Hope more Indians turn up and enjoy the show from so many other countries and our own Malaysia  this time around. And please come with your digicams as those snaps you are going to take will be appreciated by your family and friends who are unable to make it.

Thursday, 23 February 2012

Taiping Lake Garden. . .



Taiping Lake Garden has been one of our favourite places of interest whenever my family and I visit my in-laws at Kuala Kangsar. Its about 40 minutes of travelling time towards north of Kuala Kangsar.




This beautiful place was once a tin-ore mining pool and was operational as a lake garden since 1880.
Next to this lake garden is the Taiping Zoo which is also famous for its night safari activities.
Almost a perfect place to chill out with friends and family for its unique trees, lake and its clean air.

படித்ததில் பிடித்தது. . .

சிறு வயதில் ஆங்கில ஆர்வத்தில் நான் படித்த மேல் நாட்டுக் கதைகளில் இது ஒன்று. ஏதோ ஒரு விழாவிற்கு சென்றிருந்த போது அங்கே இருந்தவர்களில் சிலர் "எனக்கென்ன"  என்ற வார்த்தையை பயன்படுத்திய விதத்தில் இக்கதை மீண்டும் என் நினைவுக்கு வந்துவிட்டது.

ஒரு வெள்ளைக்கார விவசாயியின் வீட்டில் ஒரு எலி வசித்து வந்ததாம். ஒரு நாள் அது தன்னை பிடிக்க வைத்திருந்த எலிப்பொறியை பார்த்துவிட்டது. 

"போச்சிடா சாமி, இதுலே மாட்டுனா என் உயிர் போயிடுமே" என்று எண்ணி பயந்து நடுங்கியது.

அது ஒரு பண்ணை வீடு. அங்கிருந்த கோழியிடம் சென்று தான் கண்டதை சொல்லி உதவி கேட்டது.

ஆனால் கோழியோ," அது உனக்காக வைக்கப்பட்ட பொறிஅதனால் எனக்கென்ன? " என்றது.

எலி அறுகில் இருந்த பன்றியிடம் சென்று முறையிட்டு அழுதது..."என் உயிருக்கு ஆபத்து. எனக்கு உதவி செய்நாம் நண்பர்களாக நெடு நாள் வாழலாம்" என்றது.

ஆனால் பன்றியும் கோழியைப் போலவே "எனக்கென்ன" என்று சொல்லி போய்விட்டது.

அந்தப்பண்ணை வீட்டில் இருந்த மிருகங்களில் காளைமாடுதான் பெரிய உருவம். எலி அதனிடம் சென்று தன்னைக் காப்பாற்றும் படி கேட்டது.

"எலியே நீ அதில் மாட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிப்போ" எனச்சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றது காளைமாடு.

எலிக்கு அன்றிரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. வளையில் கவலையோடு பதுங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று "பாடார்" என்று ஒரு சத்தம். அந்தப்பொறியில் பாம்பு ஒன்று மாட்டிக்கொண்டது.

சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயியின் மனைவியை அந்த பாம்பு தீண்டி விட்டது.

விவசாயி மருத்துவரை வரவழைத்து விஷத்தை முறிக்கும் மருந்தை கொடுத்தான்.

அயலூர் பண்ணையைச் சேர்ந்த கிழவி ஒருத்தி மருத்துவ தன்மை கொண்ட வேர்களை கஷாயம் செய்து, அதிலே கோழியைப் பிடித்து வெட்டிப்போட்டு அந்த விவசாயியின் மனைவிக்கு உண்ணக்கொடுத்தாள்.

விவசாயியின் மனைவியை பாம்பு தீண்டி விட்டச்செய்தி விவசாயியின் உறவினர்களுக்கும் தெரிய வந்தது. அவர்களும் வந்தனர். உணவுக்கு பன்றியை சமைத்துச் சாப்பிட்டனர். கூடமாட இருந்து அவள் நன்கு தேறிவர ஒத்தாசையாக இருந்தனர். வெகு சீக்கிறமே விவசாயியின் மனைவி குணம் அடைந்தாள்.

விவசாயியோ தன் நன்றியைக் காட்டும் விதமாக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். காளை மாட்டினை வெட்டிச் சமைத்து உண்டு மகிழ்ந்தனர் அணைவரும்.

"எனக்கென்ன?" என ஒதுங்கிய கோழி, பன்றி, காளைமாடு  ஆகிய மூன்றும் ஒற்றன்பின் ஒன்றாக உயிர் இழந்ததை தன் வளையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது அந்த எலி.

பல நேரங்களில் நாமும் அப்படித்தான். நம்மைச்சுற்றி உள்ளோரின் சிற்சிறு பிரச்சினைகளை நாம் சரிவரத் தீர்த்து வைக்காமல் அலட்சியப்  படுத்தி விடுகிறோம். அப்பிரச்சினை பெரிதாகும் போதுதான் நம் தவற்றை உணர்கிறோம்.

 

இன்றைய நினைவு. . .

துணிந்தவர் தோற்றதில்லை. . .

தயங்கியவர் வென்றதில்லை. . .

Wednesday, 22 February 2012

படித்ததில் பிடித்தது. . .



இளையராஜா கவிஞர் கண்ணதாசனை முதல் முறை சந்தித்த அனுபவம் .....

"நான் ஜி.கே வெங்கடேஷிடம் பணியாற்றி கொண்டிருந்த போது முதன் முதலாக கவிஞரை சந்திதேன்.ஜி.கே.வி கன்னடத்தில் இசை அமைத்த ஒரு மெட்டை தமிழில் இசை அமைக்க தீர்மானித்து,பாடலை எழுத கண்ணதாசனை அழைத்தார். கன்னடத்தில் அந்த பாடல் எழுதிய் பாடலாசிரியருக்கு ஒரு வாரம் பிடித்தது,ஓரளவு கடினமான மெட்டுதான்.

கண்ணதாசன் வந்தார், நான் கிடார் வைத்து கொண்டு உட்கார்ந்த...ு இருக்கிறேன்.டைரக்டர் சுழலை சொல்ல சொல்ல கவிஞர் கவனிக்கவே இல்லை..புகை பிடிக்கிறார், பிடிக்கிறார் பிடித்து கொண்டே இருக்கார் .. எனக்கோ எரிச்சல் வந்தது..டைரக்டர் சொல்லி முடிச்சதும், ஜி.கே.வெங்கடேஷை பார்த்து, சரி டியுன் என்ன என்றார்..
ஜி.கே.வி: தானானனே நா நா.. டியுன் கேப் விடாம போய்டே இருந்தது..இன்னோரு வாட்டி கேட்டு கொண்டார்

தானானனே நா நா
தேன் சிந்துதே வானம்
அப்புறம் என்ன ?

தனா தனா தானானனா
உனை எனை தாலாட்டுதே
இப்படியே தொடர்ச்சி இல்லாமல்..
மேகங்களே
தரும் ராகங்களே

என்று கூறி கொண்டே இருந்தார்.. கடைசியா எல்லா வரிகளையும் ஒன்று சேர்த்து பாடி பார்த்தால்..அந்த மெட்டுக்கு அந்த பாடல் அவ்வளவு அற்புதமாக பொருந்தியது..

 மெய் சிலிர்த்து போனேன் .  அந்தப் பாடலின் முழு வரிகளும் இதோ...

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க


பன்னீரில் ஆடும் செவ்வாடை கால்கள்
பனி மேடை போடும் பால் வண்ண மேனி(2)
கொண்டாடுதே சுகம் சுகம் பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்(2)
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே

கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களின் இதம் பதம் காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

("தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்" எனும் முகநூல் பக்கத்தில் இருந்து.)

Tuesday, 21 February 2012

விளம்பரத் தகவல்

ING MEDICAL CARD
ஆபத்து அவசரத்தின் போது ஓடி வந்து உதவும் உங்களின் தனிப்பட்ட ஃபைனான்ஸியர்
. . .