Tuesday, 21 February 2012

பழைய பாடல்கள். . .

காலத்தாலும் அழிக்க முடியாத பழைய பாடல்கள் நிறைய உண்டு.  புதியவற்றை ரசிக்கும் அதே நேரம், அன்றைய பாடல்களை கேட்டு வளர்ந்த நாட்களையும் அன்று வெளிவந்த கவிதைத் தன்மையுடனான திரைப் பாடல்களையும் எண்ணிப் பார்க்கும் போது, இழந்த சொர்கம் என்று சொல்வது அது போன்ற பழைய நாட்களையும் பழைய பாடல்களையுமா என சொல்லத் தோன்றுகிறது.


எனக்குப் பிடித்த சில இங்கே...

பாடல்: தமிழுக்கும் அமுதென்று பேர்
திரைப்படம்: பஞ்சவர்ணக் கிளி
பாடியவர்: பி.சுசிலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமுர்த்தி
வரிகள்: பாரதிதாசன்


தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்.   

------0-----------0-----------


வாழ நினைத்தால் வாழலாம் திரைப்படம்: பலே பாண்டியா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி


ஆ...ஆ...ஆஹஹா ஓஹொஹோ... ஆ...ஆ...ஆஹஹா

ஓஹொஹோ...

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாக ஆசையிருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம்
தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி
கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்.....

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால்
வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால் த்ன்னை மறந்தே
வாழலாம்..........

வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணியாக அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம்

வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்   


-----0-----------0----------


தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே பாடியவர்: எஸ். ஜானகி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம்: ஆலயமணி

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே - அந்த
தூக்கமும் அமைதியும் நானானால் - உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

காலையில் நான் ஓர் கனவு கண்டேன் - அதை
கண்களில் இங்கே எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல்
கொடுத்து விட்டேன் உன்தன் கண்களிலே
கண்களிலே கண்களிலே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திரு முகம் காட்டி
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே - அந்த
தூக்கமும் அமைதியும் நானானால் - உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
ஆஹஹஹாஹஹா ஆஹஹஹா
அஹஹஹஹாஹா ஹாஹஹஹா   


-----------0-------------0-----------


காதோடுதான் நான் பாடுவேன் படம் : வெள்ளி விழா
இசை : குமார்.V
பாடல் : வாலி
பாடியவர் : L.R. ஈஸ்வரி

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் - உன்
மடிமீதுதான் கள் மூடுவேன்

(காதோடுதான்)

வளர்ந்தாலும் நானின்னும் சிறுபிள்ளைதான் - நான்
அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துனையாக எனை மாற்ற வா - குல
விளக்காக நான் வாழ வழி காட்ட வா
(காதோடுதான்)

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது - இதில்
யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

(காதோடுதான்)   


----------0-------------0---------------


நெஞ்சம் மறப்பதில்லை திரைப் படம்: நெஞ்சம் மறப்பதில்லை
பாடியவர்கள்: பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை: எம். எஸ்.வீ.- டி.கே.ஆர்
வரிகள்: கண்ணதாசன்

பெண்:ஆஆ..............

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)

பெண்: நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)

பெண்: ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை
இது சோதனையா நெஞ்சின் வேதனையா
உன் துணையேன் கிடைக்கவில்லை
உன் துணையேன் கிடைக்கவில்லை(நெஞ்சம் மறப்பதில்லை)

ஆண்: ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும்
மறு பிறப்பினிலும் நான்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன்(நெஞ்சம் மறப்பதில்லை)   


-------------0--------------0----------------



அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
படம்
- ஆண்டவன் கட்டளை
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா

டி.எம்.எஸ்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

டி.எம்.எஸ்
தென்fனம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

பி.எஸ்.
ஓ ஓ ஓ
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

பி.எஸ்
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

டி.எம்.எஸ்
அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

(இருவரும்)
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்   


என்று, எங்கு, எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் துளியாய் இனிப்பது பழைய பாடல்களே. கேட்க கேட்க இனிமை கூடுமேயன்றி குறையாத ஒரு மகத்துவம் இந்த புகழ்பெற்ற  பழைய பாடல்களுக்கு உண்டு.


அன்றைய திரைப்பாடல்கள் தமிழ் மொழி வளர பெரிதும் துணை புரிந்தன.

Monday, 20 February 2012

வழக்கம் போல . . .

இயற்கை காட்ச்சிகள் மனதுக்கு இதமான, சாந்தமான சூழ் நிலையை ஏற்படுத்தி நிம்மதியை தருகின்றன.


வெளியூர் பயணங்கள் அவ்வளவு எளிதல்ல... பொருளாதாரமும், ஓய்வு நேரமும் வசதியாக அமைந்தாலன்றி நாம் எங்கும் பயணம் போவது சாத்தியப் படாது.

ஆயினும் அப்படி ஆறுகள் குளங்கள் போன்ற பசுமை நிறைந்த இடங்களுக்கு போய்வரும் சுகமே தனிதான்.  அதிலும் நல்ல நல்ல மரங்கள் இருக்கும் இடமென்றால் சொல்லவும் வேண்டுமா என்ன...

எனக்கு பெரிய மரங்களை ரொம்பவும் பிடிக்கும்.  மரங்களினால் பல நன்மைகளே. மரங்கள் நமக்கு காய்களையும் பழங்களையும் சுத்தமான ஒக்ஸிஜனையும் தருகின்றன. வெயில் காலங்களில் மரங்களின் நிழல் நமக்கு குளிர்ச்சியாக ஆகின்றது.

மரங்கள் பெரியதொரு தத்துவத்தை உணர்த்துகின்றன.
மண்ணிலிருந்து தோன்றும் அவை மண்ணுக்குள்ளேயே மடிந்து மறைகின்றன. அதே போன்று மனிதர்களும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே போக வேண்டிய கால நேரத்தில் போய் சேர்ந்துவிடுகிறோம்.   வாழும் காலத்தில் மரங்கள் மற்றவர்களுக்கு பலனுள்ளவைகளாக இருப்பது போல நாமும் பிறருக்கு உதவியாக இருக்கவேண்டிய சாராம்சத்தை எல்லா மதங்களும் விளக்குகின்றன.

Wednesday, 15 February 2012

எனது நண்பரைப் பற்றி நான்...

திரு. செல்வகுமார்  கலியபெருமாள்
தோற்றம்    :  07.10.1956       மறைவு      : 03.02.2012
உள்ளும் புறமுமாக இருக்கும் மனிதர்கள் மத்தியில் உள்ளம் நினைப்பதை உதட்டில் சொல்லிய நேர்மையான சிலரில் ஒருவர்.
திட்டிக்கேட்கும் நேரம் செல்லமாக தட்டிக்கேட்ட நண்பர்.
எண்ணம்போல் வாழ்வு என்பதற்கொப்ப தான் நினைத்தபடி வாழ்ந்தவர்.

பண்பும் பாசமும் நிறைந்த பண்பட்ட மனிதர்.
எங்களின் கலந்துரையாடல் பலவற்றை பற்றி இருக்கும்.  அரசியல், பொருளாதாரம், விவசாயம், மக்கள் நலன் பற்றிய பொது விஷயங்கள்  என்றில்லாமல் ஓய்வு நேரத்தில் கருத்தான, கவிதை தரம் நிறைந்த தமிழ்ப்பாடல்களையும், தமிழ்ப்படங்களையும், கம்ப்யூட்டர் வலைத்தளங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருப்போம்.

என்னுடையது போலவே அவருக்கும் ஒரு வலைத்தளம் இருந்தது. தனது எண்ணங்களை அதில் அவர் எழுதி வந்தார்.
 இனிமையான நாட்கள் அவை.  மீண்டும் வருமா???
-  எஸ்.மணிராஜ்

Sunday, 12 February 2012

புரிந்ததும் புரியாததும்...


புரிதலில் பூத்தது வாழ்வு !
பிரிந்து  போனது பகிர்ந்துகொண்ட உறவு !
புரியவில்லை சொல்லாத திடீர் பிரிவு...
சொல்லிப் பிரிந்திருந்தால் புரிந்திருப்பேன்...!
- திருமதி செல்வம்

putra jaya.... in pictures





Wednesday, 8 February 2012

சிவபுராணம். . .

ஆருயிர் நண்பர் திரு செல்வத்தின் மறைவையொட்டி சிவபுராணம் இங்கே. . .


திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

பொருள்:

நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.
கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க. திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க. தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க. ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

குறிப்பு:

1. மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது. சிவம் வாழ்க என்று கூடத் துவங்காமல் வணக்கத்திற்குரிய நம முதலில் கூறி இறைவனின் சிவ என்ற திருநாமத்தைச் சொல்வது அவருடைய பணிவன்பின் வெளிப்படை.

2. திருவாசகத்தில் சிறப்பிடம் பெறுவது ஆகமம். இம்முதற் பதிகத்திலேயே அதனைப் போற்றி நிற்பது அவருக்கு ஆகமங்கள் பால் உள்ள பெருமதிப்பைக் காட்டுவன. வேதங்கள் இறைவனுடைய இயல்பு கூறுகின்ற போது, ஆகமங்கள் அப்பெருமானை எவ்வகை அடையலாம் என்பது பற்றி நமக்குக் காட்டுகின்றன. வேதங்கள் அறிவானால் ஆகமங்கள் அந்த அறிவின் பயன்பாடு. இவ்வாறு ஆகமங்கள் நமக்கு இறைவனின் அருகில் செல்லும் வழி காட்டுவதாலும், ஆகமங்கள் இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாலும் இறைவனை, "ஆகம நெறி தந்து அருகில் வரச் செய்கின்ற வள்ளல்" எனப் போற்றுகின்றார்.

3. இறைவன் ஒருவனே. (ஏகம் சத் - வேதம், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமந்திரம்). அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும் பொருட்டு பலபல வேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான்.

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

பொருள்:

என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும்.
பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும்.
தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும். கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும்.
தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.

குறிப்பு:

1. வேகம் கெடுத்தல் - துயரம் நீக்குதலைக் குறிக்கும். மனத்தின் வேகத்தையும் (நிலையில்லாமல் அலைபாய்தல்) அதனால் வரும் கேட்டின் வேகத்தையும் குறைத்து தன் பால் மனத்தை நிலைபெறச்செய்யும் ஈசனின் கருணையையும் குறிக்கும்.

2. பிஞ்ஞகன் - பீலி அணிந்தவன் எனவும் பொருள் கொள்ளலாம். (இறைவன் குரண்டாசுரனின் பீலியை அணிந்த விபரம் கந்த புராணம் ததீசி முனிவர் வாக்கில் காண்க.)

3. சேயோன் - சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன்.

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

பொருள்:

எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி.
எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.
ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.
சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.
அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி.
மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி.
அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.

குறிப்பு:

1. தேசு - ஒளி (சிபிவிஷ்டாய நம: - சிவ அஷ்டோத்தரம் )

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20

பொருள்:

அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள்.
சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால்
அவனுடைய திரு
வருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.

குறிப்பு:

1. "சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்ற இவ்வரிகள் அன்பினால் நிறை நிற்கின்ற அடியவர்க்கு மட்டுமல்லாது தத்துவம் விரும்புவோருக்கும் பெரும்பொருள் வாய்ந்தது.

திருவாசகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கருத்து, "இறைவன் தானே வந்து ஆட்கொள்கிறான்.

" கட்டுண்டு தவிக்கும் பசுக்களாகிய நம் எல்லா உயிர்களின் பொருட்டு அரியவனாகிய இறைவன் எளிமையாக நிற்பது சித்தாந்தத்தில் காண்க. அவ்வாறு எளிமையாக வந்திருக்கும் இறைவனைத் தொழுவதற்கும் அப்பெருமானுடைய அருளையே துணையாகக் கொண்டாலேயே அது முடியும். (அருளே துணையாக ... அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே - சம்பந்தர்)

கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் 25

பொருள்:

நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன்.
சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று,
வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும்,
அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! - உன் பெரிய பெரிய தன்மைகளை மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.

குறிப்பு:

1. பாசத்தால் கட்டுண்ட பசுக்களின் உய்வின் பொருட்டு இறைவனால் நுண்ணுடலும் (சூக்ஷ்ம சரீரம்) அவற்றின் வினைக்கேற்ற (பரு) உடல்கள் பின்னும் அருளப்பட்டன என்பது சித்தாந்தம் கூறும் உலகின் துவக்கம்.

2. நுதல் - நெற்றி; இறைஞ்சி - வணங்கி; இறந்து - கடந்து; புகழும் ஆறு - புகழும் வகை.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

பொருள்:

புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும், பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும், கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும் இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே !

குறிப்பு:

1. விருகம் - மிருகம்; தாவர சங்கமம் - (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம்.

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
  உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

பொருள்:

உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேன். நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந்த உண்மைப் பொருளே ! காளையை ஓட்டி வருபவனே ! வேதங்கள் "ஐயா !" எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் பலபல தன்மைகளைப் பெருகி ஆராய்ந்தும் காண முயலுகின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே !

குறிப்பு:

1. இறைவனுடைய பெருமையை அறிந்து அவருடைய திருநாமங்களில் மூழ்கியிருப்போருக்கு இங்கேயே வீடுபேறு - வேதம்.

2. வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்தும், பலபல கோணங்களில் கூறியும் அவர் தம் பெருமையைக் கூறச் சொற்கள் இல்லாமையை உணர்த்துகின்றன. அத்தகு பெரிய அவரோ மிகச்சிறியவற்றிலும் நிறைந்துள்ளார். என்ன விந்தை இது ?!

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

பொருள்:

வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே.
என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே !
பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து, உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே !
எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே !
அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே !

குறிப்பு:

1. சுடர் மிகுவதால் இருளுக்குக் கேடு - பசவண்ணர். உள்ளத்தில் மெய்ச்சுடரான இறைவன் வர பொய்யிருளுக்குக் கேடு.

2. வெய்ய - காய்கின்ற/ சூடான; தணிய - குளுமையான.

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

பொருள்:

தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே !
நீ உலகங்களையெல்லாம் தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய், (இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய், உயிர்களை மாயைக்குள் போக்குவாய் !
நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய். மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூக்ஷ்மமான) பொருளே !
வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே !
சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே !

குறிப்பு:

1. இறைவனுக்கு பிறவற்றைப் போலத் தோற்றம், வாழ்வு, முடிவு இல்லாமையைக் குறிப்பிட்டு, அப்பெருமானே மற்ற எல்லாப் பொருள்களுக்கும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்கள் மூலம் இயங்கச்செய்கிறார் என்னும் திறத்தை வெளிப்படுத்துகிறார்.

2. ஒப். உன்றன் அடியார் நடுவுற்றிருக்கும் அருளைப் புரிவாய்.

3. மணமானது காண இயலாத நுண்பொருள்களாகப் பரவுகின்றது. இறைவன் அந்த நுண்மையினும் நுண்மையாக இருக்கிறார்.

4. சேய்மை - தொலைவு; நணியது - அருகில் இருப்பது; மாற்றம் - சொல்.

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் ......

பொருள்:

அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று, இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே !
ஐந்நிறமும் நீயே ஆனாய் !
வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக மறைந்திருந்தாய், எம்பெருமானே !

குறிப்பு:

1. வினை நிறைந்த பிறப்பினால் அவதிப்படும் ஆன்மாக்களில் அன்பினால் இறைவன் திருவடி பற்றுபவர்களுக்குக் கடினமான முறைகளினால் அல்ல, மிகவும் எளிதாகவும் தேனினும் இனிய ஊற்றாக அவர்கள் உள்ளத்தில் தோன்றி அவர்களுடைய பாச மலம் அறுக்கிறார் சிவபெருமான்.

....... வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

பொருள்:

கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை மறைத்து மூடிய மாயையாகிய இருளினை செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது என்னும் விதிகளால் கட்டி, மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப் போவதாகவும், அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து, மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடலை வைத்துக்கொண்டு மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற,

குறிப்பு:

1. உடலின் கட்டுமானம் விவரிக்கப் படுகிறது.

விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே

பொருள்:

ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம் கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய என்க்கும் அருள்செய்து, இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து, உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி, நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப் பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான தத்துவப் பொருளே !

குறிப்பு:

1. கேவலமான நிலையில் நாம் இருப்பினும் இறைவன் திருவருள் நம்முடைய இழிவு கண்டு புறம் தள்ளாது, அளத்தலுக்கு இயலாத கருணையினால் நம்மை ஆண்டு கொண்டருளும் வண்ணம் இங்கு தொழப் படுகின்றது.

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

பொருள்:

குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே ! ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தை உடையவனே ! பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே ! இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய, என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே !

குறிப்பு:

1. இறைவன் உயிர்கள் பால் அவரவர் தன்மைக்கு ஏற்ப அறக்கருணை, மறக்கருணை காட்டி நல் வழிப்படுத்துகிறார். மணிவாசகப் பெருமான், சிவபெருமான் தமக்கு அறக்கருணை புரிவதன் மூலமே நெஞ்சின் வஞ்சமெல்லாம் அகல வழிவகை செய்துவிட்ட வகையைப் போற்றுகின்றார்.

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

பொருள்:

தெவிட்டாத அமுதமே !
அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே !
ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே !
(என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே !
இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே !
உள் நிற்பவனே !

குறிப்பு:

1. இறைவன் எல்லாருடைய உள்ளத்திலும் உள்ளார். எங்கும் நிறைந்தும் அதே நேரத்தில் எல்லாம் கடந்தும் இருப்பதால் அவரைக் கடவுள் என்கிறோம். ஆயினும் ஆர்வமும் முயற்சியும் உடையவர்கள் சிவபெருமான் திருவருளினால் அவரை உணர்கின்றார்கள். மற்றவர்கள் அலைவரிசை ஒன்றியையாத ஒலிப்பெட்டி போல அவர் மிக அருகில் இருந்தும், பேரொளியாக இருந்தும் காண இயலாதவர்களாக உள்ளனர். (ஒ. பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாகக் கொள்வானே - திருமூலர்)

2. இறைவனுடைய எண்குணங்களில் ஒன்று வரம்பில் இன்பமுடைமை. அவ்வாறு இருக்க "இன்பமும் துன்பமும் இல்லானே" எனக் கூறுவது பொருந்துமா எனக் கேட்டால், இறைவனுக்குப் பிறவற்றால் எவ்வித இன்பமோ துன்பமோ இல்லை. செம்பொருளாக உள்ள அது தன்னுடைய வற்றாத இன்பத்தில் தானே என்றும் மகிழ்ந்து இருக்கும்.

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே

பொருள்:

அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவாயவனே ! எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே ! சுடருருக்கொண்டவனே ! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே !
பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே !
முதலாக இருப்பவனே !
இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும் ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே !
(காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக - அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே !
உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய சிந்தையின் பார்வை வியத்தற்கு உரிய பார்வை !
அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே !

குறிப்பு:

1. சிவபெருமான் எல்லாப் பொருள்களுடனும் கலந்து தோன்றினும் இவை எதுவும் அவரல்ல. அவர் கலந்து இருப்பது போலவே எல்லாம் கடந்தும் உள்ளார்.

2. சிவபெருமானுக்கு அவதாரம் இல்லை. அவர் பிறப்பது இல்லை.

3. இறைவன் அன்பர்களுக்கு எளியவனாகக் காட்சி அளித்த போதிலும், அவருடைய பேரியல்பு யாராலும் முழுதும் ஆய்வது பற்றி எண்ணியும் பார்க்க இயலாதது. எனவே தான் அவருடைய இயல்பினை சற்றேனும் காண முயல்கின்ற ஞானிகளின் திறனை வியந்து கூறுகின்றார் மாணிக்க வாசகர். (ஒ. பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறியாமை விளம்புகின்றேனே - திருமந்திரம்)

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள்:

நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணிய மூர்த்தியே ! என்னைக் காக்கின்ற காவல் தெய்வமே !
காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே !
தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே !
தந்தையே !
மிகுதியாக நின்ற ஒளி வீசும் சுடரான தோற்றத்தினனாய், சொல்லப்படாத பூடகமான நுண் உணர்வாக இருந்து

குறிப்பு:

1. இறைவன் எங்கும் நிறைந்து இருக்கும் பொழுது அவர் எதனை நீங்குவார், புதிதாக வருவதற்கு அவர் இல்லாத்தது என்ன உள்ளது, அவர் கலந்து இல்லாத பொருள் தான் ஏது - புதிதாகக் கலப்பதற்கு ? இவ்வாறு எல்லாப் பொருளிலும் இருந்த போதிலும், பொருளின் தன்மையால் குறைபடாமல் தான் என்றும் தூயவனான புண்ணிய மூர்த்தியாகவே உள்ளார்.

2. இறைவன் சொற்களால் சொல்லி முடியாதவர். நுண் உணர்வால் அறியப் படுபவர். (ஒ. அவனருளே கண் கொண்டு காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே - தேவாரம் )

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

பொருள்:

இவ்வுலகில் பல்வேறு விதங்களில் கூறப்பட்டு, மெய்யறிவாக ஆகும் (ஆய்வின் இறுதியில் சாறாகத் தேறும்) தேற்றமே !
அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே !
என்னுடைய சிந்தனையினுள் உண்பதற்க்கு மிகவும் அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே !
என்னை உடைமையாக ஆள்பவனே !
பலவேறு விகாரங்களை உடைய ஊனால் (சதையால்) ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்க இயலவில்லை, எம் தலைவா !
அரனே ! ஓ ! என்று பலவாறு

குறிப்பு:

1. ஒ. ஏகம் சத் விப்ரா பஹ¤தா வதந்தி - வேதம்.

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
  நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

பொருள்:

போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள் மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில் சிக்குறாது மாயையால் ஆன இவ்வுடலின் கட்டுமானத்தை அழிக்க வல்லானே !
வேறு எதுவுமற்றதாகிய இருளில் கூத்து ஆடுகின்ற நாதனே !
தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆடுபவனே !
தென்பாண்டி நாட்டை உடையவனே !

குறிப்பு:

1. இருள் என்பது (ஒளீ) இன்மையைக் குறிக்கும். உலகங்கள் எல்லாம் ஒடுங்கிய பின்னர் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்நிலை ஏதுமற்ற இருள் போன்றது. அவ்விருளில் ஒளியாக இறைவன் ஆடுகின்றார்.

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
  சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

பொருள்:

அல்லல் நிறைந்த பிறவியை நீக்குவானே !
ஓ ! என்று சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, (இறைவன்) திருவடியை பணிந்து அதன் கீழிருந்து சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள், பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும்.

குறிப்பு:

1. பொருளினை உணர்ந்து சொல்லுவதன் மூலம் உணர்வினோடு ஒருமைப்பட்டுத் தொழுதலால் அவ்வகை வணக்கத்தின் பெருமை வலியுறுத்தப்படுகின்றது.


திருச்சிற்றம்பலம்
( ப்ரொம் என் ஒன்லைன் சோர்ஸ் )

Sunday, 5 February 2012

செல்வகுமார் @ செல்வம். . .

சகல விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்த ஒருவர், செல்வம்.
தனக்கு சம்பந்தமில்லாத துறையானாலும் அதையும் தெரிந்து கொள்வதில் இவர் எப்போதும் ஆர்வம் காட்டினார்.

கம்ப்யூட்டர் ஆர்வம் இவரிடம் மிக அதிகளவில் இருந்ததினால், புது பொருட்களையும், புது யுக்திகளையும் மற்றும் சுடச்சுட செய்திகளையும் இவர் மற்றவர்களைவிட முன்கூட்டியே தெரிந்து கொண்டு அடுத்தவர்களுக்கு சொல்லித்தந்தார்.

தான் செய்த எல்லாவற்றிலும் ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தியவர் இவர்.


35 வருட பழக்கமானாலும், தொலைபேசியில் அழைத்த ஒவ்வொரு முறையும் "ஹல்லோ மிஸ்டர் மணி.." என தனது உரையாடலைத் துவங்கி தனது கணத்த குரலுக்கு ஒரு முத்திரையைப் பதித்த எனது இனிய நண்பர் இன்று நம்மோடு இல்லை.

 

செல்வமும் நானும் எங்களின் 35 வருட நட்பின் போது என்னவெல்லாம் செய்தோம் என்று திரும்பிப் பார்ப்பது மனதுக்கு நிறைவான ஒன்றாகவே இருக்கிறது.

எங்களுக்குள்ளும் சின்னச் சின்ன பிணக்குகள் தோன்றியிருக்கின்றன. ஆனால் அவை பெரிய சண்டைகளாக உருவெடுத்ததில்லை. தவறுகளை சரிசெய்து நட்பின் ஆழத்தை உறுதி படுத்தியிருக்கிறோம் இத்தனை காலமாக.








நடக்கும் ஒவ்வொரு நொடிக்குள்ளும் எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள், அதிர்ச்சிகள் ஒளிந்திருக்கின்றன.

இப்படி அடுத்த நொடியில்  என்ன நடக்கும் என்று தெரியாத மர்மம் தான் வாழ்வின் சூத்திரமோ?

3.2.2012 மாலை செல்வம் மாரடைப்பால் காலமானார்.

மனம் சொல்லமுடியாத துயர்கொள்கிறது...

மரணம் இயற்கை என்பது தெரிந்திருந்தாலும், ஏற்றுக்கொள்ள வழி தெரியாது உள்ளம் தவிக்கிறது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிவாராக.

ஓம் சாந்தி...

It was so shocking and saddening to hear the sudden news of Selvam passing away.  Unexpected and without a warning, he left this world on 3rd of Feb 2012. 
He was a helpful and joyful a person, someone you could count on anytime to make matters light and easy.
Those around him are still finding it difficult to believe that he is no more now.... Unfortunately, thats the bitter fact and we have to live with from now on.

We bemoan that he passed on too young in disbelief.

SELVAM ....   we salute you for being a wonderful person.

REST IN PEACE MY DEAR FRIEND....