Saturday, 2 December 2023

இணையத்தில் எனது வலைப்பூ

நமது தமிழ் மொழி பழமை வாய்ந்த ஒன்று. கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்பு ஓலையிலும், கல்வெட்டுகளிலும், காகிதங்களிலும் புகழ்பெற்றிருந்த தமிழ், தற்போது இணையத்திலும் ஆழமாக வேரூன்றி சாதித்து வருகிறது. 

வாசிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல்  எண்ணுகின்ற கருத்துக்களை எழுத்துக்களாய் வலையேற்றி இணையத்தில் இணைக்கும் அத்தனை தமிழ் அன்புள்ளங்களும் இந்த வெற்றிக்கு  காரணமானவர்களே.

ஆங்கிலம் உலகமெங்கும் சென்றடைய காரணம், அவர்களின்  பயன்பாடும், பகிர்வுகளும் பல ஊடகங்களின் வழி  சென்றடைந்துதான். அதன்படி பார்க்கையில், தமிழ்மொழியை  பேசி, படிப்பதோடு நின்றிடாமல், எழுத்துலகிலும் சஞ்சரிக்க விடவேண்டும் என்பதுதான் நமது மூதாதையர்களின் இலக்கு.  இது வெற்றிபெற நமக்கு உறுதுணையாக வருவது 21ம் நூற்றாண்டின் பிரமாண்ட கண்டுபிடிப்பான இணையம்.  

நமது பதிவுகளை பகிர பல வலைத்தளங்கள் இருந்தாலும், எனக்கு எளிமையாக படுவதும், பலரும் இலகுவாக கற்றுக்கொள்ளும் விதம் அமைந்திருப்பதும், வலைப்பூ ஆகும். எண்ணக்கோர்வைகளை தட்டச்சு மூலம் வலைப்பூவில் பகிர்ந்திட நாம் போன பின்பும் நம்பெயர் சொல்லும் என்பர்.

இணையத்தில் நம் பிரதிகள் வெள்ளத்தில் மூழ்காமல், வெந்தணலில் வேகாமல், கள்வர்களால் அழித்திட முடியாமல் காலங்காலமாக நிலைத்து நிற்கும். 

இது சுயநலம் போல் பட்டாலும், பொதுநலம் தாண்டி,  மொழிவளம் காப்பதற்கான நமது பங்களிப்பு என்பது உண்மை.

உலகெங்கும் சிதறிப்போனாலும், கட்டுக்கோப்புடன் மீண்டு வந்து தமிழ் மொழி  வளர்ச்சிக்கு பாடுபடும் சிங்களத்தமிழர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள். யாழ்ப்பாணத்தில் தங்களது நூலகத்தை  எரித்தாலும், கிடைக்கும் புத்தகங்களை இணையத்தில் ஏற்றி " அது போனால் போகட்டும் போடா, இங்கிருக்குது புதிதாக வந்து பாரடா" என சவால் விடும் அந்த அன்புள்ளங்களுக்கு தமிழ் மொழியும் தனது நன்றியறிதலை சொல்லவே செய்யும் ... 

மதுரை தமிழிலக்கிய திட்டமான மக்களுக்கு தேவையான விலைமதிப்பில்லாத அரிய நூல்களை பதிவிட்டு பாதுகாக்கும் இணைத்தளத்துக்கும் தமிழர்கள் நன்றி சொல்லியாக வேண்டும். அங்கு இனாமாக நாம் வாசிக்க கிடைக்கும் அத்தனை புத்தகங்ளும் பொக்கிஷங்கள். சங்க காலத்து இலக்கிய நூல்கள் தற்போதைய நவீன இலக்கியம் தொடர்பான நூல்கள் அனைத்தும் ஒருங்க இருக்க காணலாம்.


Wednesday, 1 November 2023

அண்ணாமலை வந்த பின்பு திமுக படும்பாடு !

 

தனியாருக்கு தாரை வார்க்கும் 5000 கோடி அனல் மின் நிலைய ஒப்பந்தம் ரத்து . விவசாயத்தை சிதைக்கும் அன்னூர் சிப்காட் தொழிற்சாலை நிறுத்தம் . பத்து ரூபாய் பாலாஜியின் சவால்கள் ஏற்று கொள்ளப்பட்டு இன்று புழல் சிறையில் . நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சவடல்கள் ஏற்று கொள்ளப்பட்டு நிதியமைச்சர் பதவியே காலி . வடக்கன் வடகம் என்று பிரிவினை பேசி வயிறு வளர்த்து திரிந்த வாய்கள் இன்று அடக்கி ஒடுங்கி கிடக்கிறது . இந்தி மொழி மீது வெறுப்புணர்வை பதிவு செய்து அரசியல் செய்த அட்டூழியங்கள் அடங்கி பொந்துக்குள் புகுந்து கொண்டது . இந்தியாவின் மீது வன்மம் கொண்டு தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று பிரிவினை பேசிய கும்பல் தன்னுடைய நாக்கை தானாகவே சூடு வைத்து ஒடுக்கி கொண்டது . இந்து தர்மத்தின் மீது தினம் தினம் சேற்றை வாரி இறைத்து கொண்டிருந்த கும்பல் இன்று மன்னிப்பு கேட்கும் நிலைக்கு சென்று விட்டது . அனைத்து கடைகளையும், டாஸ்மாக்கையும் திறந்துவிட்டு கோவிலை மட்டும் பூட்டி வைத்த கும்பலை ஒரே அறிவிப்பில் திறக்க வைத்தார . தேர்தல் வாக்குறுதிபடி ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் ஏமாற்றி வந்த கும்பலை அதிரடி அறிவிப்பின் மூலம் வேறு வழியில்லாமல் கொடுக்க செய்தார் . ஆவின் ஊழல் பற்றி நாட்டிற்கு அண்ணாமலை அண்ணா தெரியப்படுத்த நாசர் வீட்டுக்கு போனார் . கோயம்புத்தூர் தற்கொலை படை சிலிண்டர் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக ஊரை ஏமாற்றி வந்த திமுகவின் முகத்தில் ஆணித்தரமான ஆதாரப்பூர்வமாக செய்தியாளர் சந்திப்பின் மூலம் கரியை பூசினார் . சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறிய உதயநிதி இனி ஒருபோதும் சனாதனம் பற்றி வாய் திறக்க மாட்டேன் என்று புறமுதுகிட்டு ஓட வைத்தார் . மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டு இறந்த லாவண்யாவின் விவகாரத்தை இந்திய அளவில் கொண்டு சென்று பொய் கூறிய கும்பலை திணற வைத்தார் . திமுக கும்பலின் சொத்து பட்டியலை வெளியிட்டு இந்தியாவையே அதிர வைத்து மக்களுக்கு எதிராக சுரண்டும் கும்பலை அம்பல படுத்தினார் . நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்கு ஆற்காடு வீராசாமி தொடங்கி ஜெகத்ரட்சகன் வரை செய்த தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி திமுகவை திணற வைத்து கொண்டிருக்கிறார் . கால்டுவெல் பாதிரி , ராமசாமி , அண்ணாதுரை , கருணாநிதி என அனைவரும் தமிழுக்கு தமிழருக்கு தமிழர்களின் தர்மமான இந்து தர்ம நம்பிக்கைகளுக்கு தமிழகத்திற்கு எதிராக செய்த வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி வருவதால் திக்கி திணறுகிறது போலி திராவிடம் . வடமாநிலத்தவர்களை ஆரியன் என்று திமுகவினர் வாய் கிழிய பிரிவினை பேசினால் ராகுல் காந்தியும் , மம்தா பானர்ஜியும் ஆரியர்கள் தானே, அவர்களோடு எதற்கு கூட்டணி வைத்திருக்கிறாய் என்று மண்டை அடியாக போடுகிறார் . மணல் மாபியா கொண்டு பெருத்த ஊழல்கள் செய்வதை அம்பலப்படுத்தி இன்று அமலாக்கத்துறை முழுமையாக ஆராய்ந்து வருகிறது . மின் கட்டண உயர்வை தெளிவாக விளக்கி கூறி மக்களின் ஆதரவை பெற்று திமுகவை சின்னாபின்னம் ஆக்கி கொண்டிருக்கிறார் . அறநிலையத்துறை செய்யும் அத்துமீறல்கள் சுரண்டல்கள் அட்டூழியங்களை படம் போட்டு காட்டியதால் சேகர்பாபுவை தலை தூக்க முடியாமல் தள்ளாட செய்திருக்கிறார் . என் மண் என் மக்கள் எனும் மக்கள் யாத்திரையில் பங்கு பெற்று ஒவ்வொரு பகுதி தொகுதி மக்களின் ஆத்மாவிலும் கலந்து வருவதால் திமுகவின் அடிநாளமே கதி கலங்கி போயிருக்கிறது . ஒவ்வொரு நிமிடமும் அண்ணாமலை அண்ணா என்ன செய்கிறார் எங்கு செல்கிறார் என்ன பேசுகிறார் என்பதை கவனிப்பதில் மட்டுமே தனது முழு உளவுத்துறையும் பயன்படுத்தி அவர் பேசும் விவரங்களுக்கு பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு பல்லை நெரித்து கொண்டிருக்கிறது திமுக கூடாரம் . எடப்பாடி பழனிச்சாமி திமுக செய்யும் திருட்டுகளை கண்டும் காணாமல் போவதால் அண்ணாமலை அண்ணா மக்களின் அத்தனை வாழ்வாதார பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பதால் தமிழக மக்கள் அண்ணாமலை நோக்கி வர துவங்கி இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறது திமுக . இனியும் தொடரும் போலி திராவிட கும்பல் அழியும் . #EnMannEnMakkal

Monday, 4 September 2023

'சிவனுக்கு ஒப்பான தெய்வம் தேடினும் இல்லை'

 உலகியலில் உழன்று கிடக்கின்ற  ஒருவனை பெரியவர் ஒருவர் ஆற்றுப்படுத்த, அவனை நல்வழிப்படுத்த எண்ணுகிறார். அவர்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடலைக் கேட்போம்.

பெரியவர்: நீ ஒரு ஞான குருவை சென்று பார். உன் வாழ்க்கையில் பெரும் திருப்பம் வரும்.

உலகியலான்:  குரு என்றாலே அச்சமாக இருக்கிறது. நான் எந்த குருவையும் சந்திக்க மாட்டேன்.

பெரியவர்: சரி எல்லா கோயில்களுக்கும் சென்று சிவலிங்கத்தை வணங்கு.

உலகியலான்: கோயில் குளம் எல்லாம் சுத்த முடியாது.

பெரியவர்: சரி சிதம்பரம் மட்டும் சென்று வா. அனைத்து கோயில்களுக்கும் சென்றதற்கு அது சமம். 

உலகியலான்: போகலாம் தான். ஆனால் எந்த வாசல் வழியே போவது? பெரும் குழப்பம். அதுவும் வேண்டாம்.

பெரியவர்: சரி, அடியார்களோடு இணங்கி இரு.

உலகியலான்: அவர்களோடு சேர்ந்தால் அவர்களும் நீங்கள் சொல்லியதைத் தான் என்னை செய்ய சொல்லுவார்கள். நான் சேர மாட்டேன்.

பெரியவர்: சரி சைவசித்தாந்தம் கற்றுக்கொள்ளேன். 

உலகியலான்: எப்போது பார்த்தாலும் பதி பசு பாசம் என்பார்கள். சொல்பவர்களுக்கே புரியாது. எனக்கு எப்படி புரியும். வேண்டாம்.

பெரியவர்: சரி திருமுறை கற்றுக்கொள்.

உலகியலான்: பள்ளியில் படிக்கும்போதே  மனப்பாடச் செய்யுளாக கூட இவற்றை கற்றதில்லை. வேண்டாம்.

பெரியவர்: சரி தியானம் செய். 

உலகியலான்: கண்ணை மூடினால் பயமாக இருக்கிறது. இது முடியாது.

பெரியவர்: சரி வீட்டில் பூஜை அறையில் சுவாமிகளுக்கு பூ வைத்து அந்த இடத்தை தூய்மைப்படுத்தி பூசை செய். விளக்கு ஏற்றி வை. அது போதும். 

உலகியலான்: இதற்கெல்லாம் என் உடல் வளையாது.

பெரியவர்: சரி கோயிலுக்கு செல். பூக்கள் பறித்து மாலை தொடுத்து எடுத்துச் செல். கோயிலில் ஏதாவது ஒரு புறத்தை தூய்மை செய்.

உலகியலான்: வீட்டில் காபி டம்ளரை கூட எடுத்து வைப்பது இல்லை. இது முடியாது.

பெரியவர்: பரவாயில்லை. நமசிவாய, சிவாயநம சொல்.

உலகியலான்: அஞ்சு எழுத்தா? முடியாது.

பெரியவர்: சரி, சிவ சிவ என்று சொல்.

உலகியலான்: நான்கு எழுத்தா? முடியாது. 

பெரியவர்: சரி சிவாய சொல். 

உலகியலான்: மூன்றெழுத்தா முடியாது.

பெரியவர்: சிவ என்று சொல். 

உலகியலான்: இரண்டு எழுத்தா? முடியாது.

பெரியவர்: சி சொல். 

உலகியலான்: இப்படி எல்லாம் சொல்ல முடியாது ஐயா.

பெரியவர்: சரி வேண்டாம். நாயைப் பார்க்கும் பொழுது அது உனக்கு இடையூறு செய்யவில்லை என்றாலும் அதை நீ ஓட்டு. அதை நீ விரட்டு. அது போதும்.

உலகியலான் குழம்பினான். 

உலகியலான்: நாயை ஓட்டுவதற்கும் சிவனை நினைப்பதற்கும் என்ன தொடர்பு ?

பெரியவர்: நாயை எப்படி ஓட்டுவாய்?

உலகியலான்:  சி சி என ஓட்டுவேன்.

பெரியவர்: அப்படி செய்யும் பொழுது உன்னையும் அறியாமல் சிவனை நினைப்பாய். அது போதும். அவன் உனக்கு அருள் புரிவான்.

உலகியலான்: !!!!! !!!!! !!!!! !!!!! !!!!! !!!!! !!!!! !!!!! !!!!! !!!!! !!!!!

சுவாமி ! நான் இனி அனைத்து கோவில்களுக்கும் செல்வேன். ஞானகுருவை தரிசிப்பேன். அடியார்களோடு இணங்கி இருப்பேன். எல்லா விதமான தொண்டுகள் கிரியைகள் தியானங்கள் செய்வேன். சித்தாந்தம், திருமுறை கற்பேன். இவை அனைத்தையும் நான் செய்வேன்.

பெரியவர்: திடீரென உனக்கு என்ன ஆனது? ஏன் இவை அனைத்தையும் செய்ய முடியாது என்று சொன்ன நீ இப்பொழுது அனைத்தையும் செய்கிறேன் என்று சொல்லுகிறாய்?

உல:  இப்படி எதையும் செய்ய முடியாது என்று சொல்லுகிற எனக்காக, சிவபெருமான்  இவ்வளவு இறங்கி,இரங்கி வருகிறான் என்றால் அவன் என் மீது எத்தனை கருணை கொண்டு இருக்க வேண்டும்? அப்படிப்பட்ட பெரும் கருணையாளன் அவன் என்பதை அறிந்துகொண்டேன். 

நாய் ஓட்டுவது கூட மந்திரம் என்றால் அவன் என்மீது எத்துணை அன்பு கொண்டிருக்கிறான்! அந்த அன்பிற்கு நான் அடிமை ஆகிறேன். அந்த பெரும் கருணைக்கு, அன்புக்கு நான் என்றென்றும் அடிமை என்பதை உணர்கிறேன். இனி அனைத்தையும் செய்வேன் என்று உள மகிழ்வோடு, பெரும் களிப்போடு, மனநிறைவோடு அவன் சொன்னான்.

பெரியவர் இறைவனது கருணையை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். ஒவ்வொருவரையும் அவர் பணி கொள்ளும் ஆறு அறிந்து களிப்புற்றார்.

நாமும் அவன் கருணையை உணர்வோம்! பேரின்ப வாழ்வு பெறுவோம்!!.

Sunday, 3 September 2023

எனக்கென்ன...

சிறு வயதில் ஆங்கில ஆர்வத்தில் நான் படித்த மேல் நாட்டுக் கதைகளில் இது ஒன்று. ஏதோ ஒரு விழாவிற்கு சென்றிருந்த போது அங்கே இருந்தவர்களில் சிலர் "எனக்கென்ன"  என்ற வார்த்தையை பயன்படுத்திய விதத்தில் இக்கதை மீண்டும் என் நினைவுக்கு வந்துவிட்டது.

ஒரு வெள்ளைக்கார விவசாயியின் வீட்டில் ஒரு எலி வசித்து வந்ததாம். ஒரு நாள் அது தன்னை பிடிக்க வைத்திருந்த எலிப்பொறியை பார்த்துவிட்டது. 


"போச்சிடா சாமி, இதுலே மாட்டுனா என் உயிர் போயிடுமே" என்று எண்ணி பயந்து நடுங்கியது.

அது ஒரு பண்ணை வீடு. அங்கிருந்த கோழியிடம் சென்று தான் கண்டதை சொல்லி உதவி கேட்டது.

ஆனால் கோழியோ," அது உனக்காக வைக்கப்பட்ட பொறி,  அதனால் எனக்கென்ன? " என்றது.

எலி அறுகில் இருந்த பன்றியிடம் சென்று முறையிட்டு அழுதது..."என் உயிருக்கு ஆபத்து. எனக்கு உதவி செய்,  நாம் நண்பர்களாக நெடு நாள் வாழலாம்" என்றது.

ஆனால் பன்றியும் கோழியைப் போலவே "எனக்கென்ன" என்று சொல்லி போய்விட்டது.

அந்தப்பண்ணை வீட்டில் இருந்த மிருகங்களில் காளைமாடுதான் பெரிய உருவம். எலி அதனிடம் சென்று தன்னைக் காப்பாற்றும் படி கேட்டது.

"எலியே நீ அதில் மாட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிப்போ" எனச்சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றது காளைமாடு.

எலிக்கு அன்றிரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. வளையில் கவலையோடு பதுங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று "பாடார்" என்று ஒரு சத்தம். அந்தப்பொறியில் பாம்பு ஒன்று மாட்டிக்கொண்டது.

சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயியின் மனைவியை அந்த பாம்பு தீண்டி விட்டது.

விவசாயி மருத்துவரை வரவழைத்து விஷத்தை முறிக்கும் மருந்தை கொடுத்தான்.

அயலூர் பண்ணையைச் சேர்ந்த கிழவி ஒருத்தி மருத்துவ தன்மை கொண்ட வேர்களை கஷாயம் செய்து, அதிலே கோழியைப் பிடித்து வெட்டிப்போட்டு அந்த விவசாயியின் மனைவிக்கு உண்ணக்கொடுத்தாள்.

விவசாயியின் மனைவியை பாம்பு தீண்டி விட்டச்செய்தி விவசாயியின் உறவினர்களுக்கும் தெரிய வந்தது. அவர்களும் வந்தனர். உணவுக்கு பன்றியை சமைத்துச் சாப்பிட்டனர். கூடமாட இருந்து அவள் நன்கு தேறிவர ஒத்தாசையாக இருந்தனர். வெகு சீக்கிறமே விவசாயியின் மனைவி குணம் அடைந்தாள்.

விவசாயியோ தன் நன்றியைக் காட்டும் விதமாக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். காளை மாட்டினை வெட்டிச் சமைத்து உண்டு மகிழ்ந்தனர் அணைவரும்.

"எனக்கென்ன?" என ஒதுங்கிய கோழி, பன்றி, காளைமாடு  ஆகிய மூன்றும் ஒற்றன்பின் ஒன்றாக உயிர் இழந்ததை தன் வளையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது அந்த எலி.

பல நேரங்களில் நாமும் அப்படித்தான். நம்மைச்சுற்றி உள்ளோரின் சிற்சிறு பிரச்சினைகளை நாம் சரிவரத் தீர்த்து வைக்காமல் அலட்சியப்  படுத்தி விடுகிறோம். அது பெரிதாகி நம்மையே பாதிக்கும் போதுதான் உணர்கிறோம், அது சிறியதாக இருக்கும்போதே நிலைமையை சரிசெய்திருக்கலாமே  என...


Monday, 21 August 2023

Vegetable gardening...

Prices of vegetables are soaring these days. 
The only way to overcome this problem is to plant some in our backyard. Or container gardening would be of help if those who stay in "taman" have not enough space at the place where they are staying.

Sone easier to grow veges include long beans.




The preparation for long beans is not difficult at all. You only need some sticks and rope and tie them in  a line from which the seedlings will grow up.



My wife had planted several commonly used veges like ladies finger, eggplant, murunga, curry leaves, avarakkaa etc that come handy on daliy usage.


I have tried tomatoes and found its easier to grow too.


 

Sri Prabhu...

Friendship actually means a source or a situation that we are comfortable or happy about. And there is no such thing as old friends or new friends. When you meet some one lately and you feel nice to be with him, knowing his strength and weakness, then he becomes the new entry in your friends list.

Above: My friend Sri Prabhu.
posted: 22.8.2023@1.24pm