Monday, 28 September 2015

ஞானக் கதிர்கள் 2

தங்கம் ,சிலப்பதிகாரம் !
-------------------------------------

தெய்வீகப் பெருமையும், மந்திரசக்தியும், மருத்துவ வீர்யமும் பெற்றுள்ள தங்கத்தைப் பற்றி ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான்சிலப்பதிகாரம் போற்றியுள்ளது. தற்காலத்தில் தங்கத்தின் தரத்தை 'காரட்' என்று நிர்ணயிப்பது போல் சங்க காலத்தில் தங்கத்தை 'ஆடகம்'(பத்தரை மாற்றுத் தங்கம்) 'கிளிச்சிறை' (கொங்கு நாட்டுத் தங்கம், ) 'சம்பூநதம்'(ஹரிதம்), 'அபரஞ்சி' (தூய-
தங்கம்- Pure Gold) என்று சிறப்பிதுக் கூறுகிறது சிலப்பதிகாரம்.
நன்றி: -குமுதம் (10-01-2007).

-----------------------------------------

கருக்கல்!
காலை என்பதே கருக்கல் தான்.
எந்த ஜீவராசியும் சூரிய உதயத்திற்குப் பிறகு உறங்குவதில்லை மனிதன் மட்டும் தான் சூரிய உதயத்திற்குபிறகும் உறங்குகிறான் அதிகாலை 4:30 க்கும் 5:30 க்கும் இடைப்பட்ட நேரம் 'கருக்கல்' ஆகும்.
இந்த நேரத்தில் தான் பகலின் வெளிச்சக்காற்று தோன்றி மறைந்து சற்று இருட்டாக இருக்கும். இந்த நேரத்தில் எழுந்து சுவாசித்தால் நெஞ்சில் உள்ள கெட்டக் காற்று நீங்கி அப்பழுக்கற்ற காற்று கிடைக்கும்.அது ஆரோக்கியத்தை அளிக்கும்.
நன்றி: -தினமலர் (26-12-2006).
-------------------------------------------------------

வாரண்டி - கியாரண்டி !
எந்த ஒரு பொருளுக்கும் தயாரிக்கும் நிறுவனம் உபயோகிப்பவர்களுக்கு நேரடியாகத் தரும் உத்தவாதம் வாரண்டி. கியாரண்டி என்பது டீலர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் தருவது. கம்பெனிகள் நேரடியாக உத்தரவாதம் தரும்பொழுது பழுது ஏற்பட்டால் பொருளையே மாற்றித்தர வாய்ப்பு உண்டு. டீலர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் பழுதை நீக்கித் தருவதற்குத்தான் உத்தரவாதம் அளிப்பார்கள். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.

நன்றி:தகவல் தமயந்தி - குமுதம்(18-07-2007).
--------------------------------------------------------------------------


No comments:

Post a Comment