வருகின்ற மே 2ம் தேதி முதல் செயல் படவிருக்கும் மலேசியாவின் புதிய விமான நிலையமான கே எல் ஐ ஏ 2 ( KLIA2 ) கடந்த ஞாயிறு ஒரு நாள் பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டது.
காலை 10 முதல் மாலை 6 வரை விமானப்பாதையில் விமானம் ஏறுவதையும் இறங்குவதையும் போல வந்திருந்த மக்களை பேருந்துகளில் ஏற்றிச்சென்று சுற்றிக்காண்பித்தனர் இவ்விமான நிலைய அதிகாரிகள்.
உட்பகுதியிலுள்ள வணிக மையங்களை பார்வையிட்டபடி வழக்கமான விமான நிலைய செயல்பாடுகளை பற்றிய விளக்கங்களும் தரப்பட்டது. பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.
குறைந்த கட்டணத்தில் பயணச்சேவைகளை வழங்கும் விமான நிறுவனங்களுக்கென்றே சிறப்பாக உருவாக்கப்பட்டது இந்த கே எல் ஐ ஏ 2 ஆகும். மலிண்டோ, டைகர் மற்றும் ஏர் ஆசியா நிறுவனங்கள் இட நெருக்கடி காரணமாக பல இடைஞ்சல்களுக்கிடையே பழைய இடத்தில் ஆற்றிவந்த சேவையை இந்த புது இடத்தில் விரிவு படுத்திக்கொள்ளலாம்.
எல் சி சி டி எனும் பழைய இடத்திலிருந்து அனைத்து நிறுவனங்களும் வரும் 2ம் தேதிக்குள் தொடங்க தயார் நிலையில் இருந்தாலும், ஏர் ஆசியா நிறுவனம் மட்டும் 9ந்தேதி இடமாற்றம் காண இணங்கி இருக்கிறது. புது இடம் பாதுகாப்பு குறைவானது என காரணம் காட்டி இதற்கு முன்னர் அது இங்கு வர மறுத்து வந்தது பத்திரிக்கைகளில் வந்த செய்தியாகும். ஆயினும், பல கலந்துரையாடல்களுக்குப்பின் வரும் 9ந் தேதி இங்கு ஏர் ஆசியா தன சேவையினைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மலேசியாவின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த புது விமான நிலையம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இவ்விரண்டையும் ஈ.ஆர்.எல் எனும் தொடர்வண்டிச் சேவை இணைக்கிறது. குறைந்த தூரமே ஆனாலும் இதற்கு வசூலிக்கப்படும் பயணக்கட்டணம் 2 ரிங்கிட்டுகளாகும்.
இன்னும் வரும்...

No comments:
Post a Comment