வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் நம்மிடம் உதவி கேட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிடுவதுண்டு. நிறுவனங்களில் பொறுப்பாளர்களாக இருந்தால் ஏதாவதொரு பகுதியில் வேலைக்கு அமர்த்திவிடலாம். ஆனால், நாமே நோயின் நிமித்தம் வீட்டிலிருந்து ஓய்வெடுக்கும் போது, நம்மைத் தேடி வருவோரை எப்படி நம்பிக்கையூட்டி அனுப்பி வைப்பது...?
ஆகட்டும் பார்க்கிறேன் என பலரிடம் சொல்லலாம். ஒரு சிலரிடம் சொல்ல முடிவதில்லை. அப்படி ஒரு கணக்கியல் மாணவி என்னைத்தேடி வந்தார்.
கடந்த ஏழுவருடங்களாக அவரை என் குடும்பத்தினருக்கும் எனக்கும் தெரியும். வேற்று மதத்தவரான அவர், அமைதியானவர், அன்பானவர், ஒரு புத்தகப் புழு, வெளியே அதிகம் சுற்றாதவர், இன மத பேதம் இன்றி பெரியோரிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர். இது போன்ற குணங்களுக்கு உத்திரவாதம் தரலாம்.
ஆனால் இவை மட்டுமே ஒருவருக்கு பணியிடத்தை நிச்சையமாக்கித் தந்துவிடுமா? கல்வித்தகுதியினைப்பற்றி தெரிந்திருக்க வேண்டாமா? பரிந்துரை செய்யும் ஒருவருக்கு வேறென்னதான் தெரிந்திருக்க வேண்டும்? அடிப்படை சரியாக இருந்தால் மற்றனைத்தும் சரியாகவே இருக்கும் என்பது என் நம்பிக்கை. அதன்படி பரிந்துரைக்கான கடிதத்தை எனக்குத் தெரிந்த எனது நண்பர்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.
வேலை தேடும் பலரும் எதிர்பார்ப்பது ஒரே ஒரு நேர்காணலுக்கான சந்தர்ப்பத்தையே. அந்த ஒரு சந்தர்ப்பம் எனது கடிதம் மூலம் இவருக்கு கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சியே.

No comments:
Post a Comment