Saturday, 10 September 2011

உள்ளம் கவர்ந்தவை...

பாடல்கள் புகழ் பெறுவதற்கு இசையமைப்பாளர்கள் மிக முக்கிய காரணம்.
டி ஆர் பாப்பா, கே வி மகாதேவன், குமார், விஸ்வநாதன் ராமமூர்த்தி இப்படி எல்லோரும் பாராட்டுக்குறியவர்களே. . .

தங்கள் பெயரை நிலை நிறுத்தும்படியான பல பாடல்களை அவர்கள் விட்டுச்சென்றிருக்கின்றனர். காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள் அவை.


நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்
நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ
உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ
என்ன சொல்லி விட்டேன் ஏன் மயங்குகிறாய்

செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி
கொண்ட மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி
செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி
கொண்ட மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி
சுகம் ஊறிவிட்டதடி.. முகம் மாறிவிட்டதடீ..
நெஞ்சில் அன்றில்லாத நாணம் இன்று ஏன் வந்ததடி
என்ன …. என்ன … என்ன……..

………. நான் என்ன சொல்லி விட்டேன்…………

மலர் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ அதை நினைவில் வைத்தாயோ
மலர் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ அதை நினைவில் வைத்தாயோ
கண்டு ஏங்குகின்றாயோ இன்று தூங்குகின்றாயோ
நாம் பழகபோகும் அழகை எல்லாம் படம் பிடித்தாயோ
என்ன… என்ன.. என்ன…

………. நான் என்ன சொல்லிவிட்டேன்…………   

-----------------------0---------------0------------------


மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

மழை இல்லாமல் வளமில்லை
ஒரு விதையில்லாமல் பயிரில்லை
உழைப்பில்லாமல் உலகில்லை
உன் உறவில்லாமல் நானில்லை

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

கனவில் தோன்றி சிரிக்கினாய் நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனியில் ரசமாய் இனிக்கின்றாய் என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே   


-------------0----------------0----------------


காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருவதினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன
பொழுதது? கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து ? தருகின்ற மனதல்லவோ.. தருகின்ற மனதல்லவோ

காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

கைவிரலாலே தொடுவதிலே இந்த பூமுகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தால் இந்த வையகம் இருண்டதென்ன
செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து மயக்கத்தை கொடுப்பதென்ன
… மயக்கத்தை கொடுப்பதென்ன

காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
லா.. ல..லால்லா..லால்லல்லா……..


--------------0----------------0----------------

யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ

சலவைக்கல்லே சிலையாக தங்க பாளம் கையாக
மலர்களிரண்டு விழியாக
மயங்கவைத்தாளோ…
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ..

முத்து மணித்திரள் ரத்தினமோ
மொய்குழை மேக சித்திரமோ
முத்து மணித்திரள் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ
செக்கச்சிவந்த இதழாலே
சிந்தும் புன்னகை மந்திரமோ
செக்கச்சிவந்த இதழாலே
சிந்தும் புன்னகை மந்திரமோ
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ

கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானாள்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நினைவில் மயங்கும் இருளானாள்
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ

அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதை சேர்த்து ஏன் கொண்டாள்
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ

ஆஹா ஆஹா ஆஹா…ஹா ஹாஹா….
ஓஹோ…ஓஹோ…..ஓஹோ….ஹோ…ஹோ…ஹோ…

No comments:

Post a Comment