புதிதாக செய்ய ஒன்றும் இல்லாத போது, இருப்பதை வைத்து மாற்றி யோசிக்கும் போது கிடைத்ததே இந்தப் படங்கள். ஒரே படத்தை இரண்டு முறை மாற்றியமைக்கும் போது அந்த மாற்றங்களும் நன்றாகவே வந்தன.
( மிரர் இமேஜ் @ கண்ணாடியில் தெரிவது போன்ற பிம்பம். ஒரு படத்தை பாதியாக பிரித்து அதையே மறுபக்கமும் வைக்க புதிதாக இணைக்கப்பட்ட காட்சி இப்படி தோன்றும். )
( மேலுள்ள படத்தில் ஒரு படத்தின் சின்னதாக ஒரு பகுதியை மட்டுமே மீண்டும் பயன்படுத்தி இருக்கிறேன். அதாவது, என் உருவத்தை மட்டும் இரண்டாம் முறையாக அசலுடன் பொருத்தியிருக்கிறேன். இந்த மாற்றமும் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த உதாரணத்தினைக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் அசலைப் போல நன்றாகவே இருக்கும்).
( இல்லாத புத்ராஜெயா பாலம் )
எந்த அசலான ஒன்றையும் நாம் அப்படியே விட்டு விடுவதில்லை. நம்மில் யாரோ ஒருவர் மாற்றியே யோசிக்கிறோம். முன்னேற்றகரமான சிந்தனைகளாக அவை அமைந்துவிடுமேயானால், வாழ்க்கையின் சிகரத்துக்கே நாம் சென்று விடுகிறோம்.
தமிழ் நாட்டின் (சென்னை) 'பரோட்டா' ரொட்டி நமக்கு ரொட்டி 'சானாய்' ஆனதும், அதே ரொட்டி சானாய் பதப்படுத்தப்பட்டு 'ரெடி மேட்' ஆக அனைவருக்கும் கிடைக்கும் விதம் கடைகளுக்கு வந்ததும் இந்த வித்தியாசமான சிந்தனையில் உதித்ததே.
இப்போது அதிரசம், வடை என பலவும் அப்படி வீட்டுக்கு வாங்கி வந்து உடனே சமைத்துச் சாப்பிட கிடைக்கின்றன. 'இன்ஸ்டன்" எனும் சொல் எப்படி நம்மவர்களின் ஆளுமைக்கு உட்படுத்தப்படுகிறது பாருங்கள்.
இந்த திடீர் உணவுகள் மட்டுமின்றி, உணவைப் பரிமாறும் வாழை இலையும் இப்போது பேப்பர் இலை என புதுமைப் படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்து விட்டது.

சுத்தமாகவும், இயற்கையோடு ஒன்றிப்போகும் அம்சமாகவும் இந்த காகித இலைகள் இருப்பதாக உணவக உரிமையாளர்கள் சொல்வது இந்த புது யுக்தி வெற்றிபெற்றுவிட்டதற்கான ஆரம்ப அறிகுறிகளாகும்.
இதுபோல இன்னும் எத்தனையோ நம் பயன்பாட்டில் உள்ளன. ஒரு சிலரால் மட்டுமே இது போன்ற மாற்றி யோசிக்கும் தன்மைக்கு உயிரூட்ட முடிந்தாலும், அனேகமாக நாம் அனைவருக்கும் ஏதாவதொன்று மின்னல் கீற்றாக நம் மனத் திரையில் ஒடியிருக்கலாம். அதை நடைமுறை படுத்துவதில் தான் நாம் பின் தங்கி விடுகிறோம்.