Thursday, 18 April 2019

கேமரன் மலையில் ஒருநாள்...

கேமரன் மலை அல்லது கேமரன் ஹைலண்ட்ஸ், மலேசியாவில் குளிரான பகுதி. ஓய்வில் என் மனைவியுடன் நான் வந்து தங்கி இருந்த சில நாட்களில் 13 டிகிரிஸ் செல்ஸியஸ் வரை குளிரை அனுபவித்திருக்கிறோம். சில நாட்களில் இன்னமும் குறையும் என அங்குள்ளோர் பேசிக்கொள்கிறார்கள்.
மதிய நேர சூரிய ஒளி சற்று கதகதப்பை தருவது ஆறுதலளிக்கிறது.













படங்கள் : நண்பர் தர்மதுரை, பட்டர்வொர்த்.


படங்கள் : நண்பர் தர்மதுரை, பட்டர்வொர்த்.

கையில் கிடைத்தவை, ஏப்ரல் 2019


நமது தேசிய மலைத்தொடரோடு ஒட்டிய இருபக்க வழிப்பாதைகளில் பலரும் மேற்கு பகுதியில்தான் பயணம் செய்திருப்போம். கிளந்தான், திரெங்கானு போன்ற மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் நம் சமூகத்தினர் அனுபவம் குறைவுதான்.
அதிவிரைவு ரயில் திட்டமொன்று தற்போது பெருமளவு பேசப்பட்டு வருகிறது. போர்ட் கிள்ளானில் இருந்து கோத்தாபாரு வரை திட்டமிடப்பட்டிருக்கும் அது நடைமுறைக்கு வரும்போது சுற்றுப்பிரயாணங்கள் மட்டுமல்ல வணிக வளர்ச்சிகளும் கண்முன்னே தெரியும்.






படம்: கம்பர், பேராக் அருகே அழகான ஒரு காட்சி...


Tuesday, 16 April 2019

பிரபுவுடன் சில டபுள்ஸ்...

நம்ம வீட்டு பாரம்பரியம், விருந்தாளிகளை இப்படி சில டபுள்ஸ் @ இரட்டைவேட படங்களாக எடுத்துக் கொடுப்பதுதான். கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், அனைவரும் ரசிக்கின்ற ஒன்றாக இப்பழக்கம் எங்கள் வீட்டில் நடைமுறையில் இருக்கிறது.




பிரபு ...



வழக்கமான நட்புகளையும், உறவுகளையும் பார்த்துப் பழகிடும் நேரம், புதிய உத்வேகத்துடன் ஒருவர் நெருங்கிய உறவினைப் போல நம்முடன் வந்திணைவது எவ்வளவு பெரிய விசயம்.

கடந்த மார்ச் மாதத்தில் ஒருநாள் அப்படி வந்து நம்மோடு இணைத்துக் கொண்டவர், எல்லோராலும் மகனே, மருமகனே, மாப்பிள்ளையே என செல்லமாக அழைக்கப்படும் பிரபு அவர்கள்.

முகநூலில் நட்பாக துவங்கியது இந்த உறவு. அதுவும், எனது மற்றொரு நெருங்கிய உறவான வில்சனின் அறிமுகத்தில்தான் இவரை எனது பக்கத்தில் இணைத்துக் கொண்டேன்.

தொடர்ந்த சில வாரங்களில், மாதங்களில் இவரின் நல்ல மனமும், குணமும் தெரியத் தொடங்கியது.

அது, பின் அவர் இங்கு மலேசியா வந்து செல்லுவதற்கு காரணமாகவும் அமைந்துவிட்டது.

அவருடன் எடுத்துக் கொண்ட படங்கள் இங்கே....







இன்னும் வரும்...