முதலில் இந்த கேள்வியே சற்று சிக்கலானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அம்மாவா அப்பாவா, கணவனா மனைவியா, ஆண் பிள்ளையா பெண் பிள்ளையா போன்ற இக்கட்டான கேள்விதான் இது. சிலர் இதை தமிழ்ப் பாடல்கள் பற்றி மட்டுமே என எடுத்துக் கொண்டதால் சிந்தனை வளத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து விடுகிறார்கள். இங்கே தான் ஏதோ ஒரு தவறு நடந்து விடுகிறது. ஆயினும் என்னுடைய அணுகுமுறையைக் கொண்டு கணிக்கையில் இக்கேள்விக்கான முடிவு அவ்வளவு சிரமமில்லாத ஒன்று.
முதலிடம் இசைக்கே. ஏன்?
- எண்ணிலடங்கா கருத்தாழமிக்க பாடல்கள் நம் காதுகளில் ஒலிக்கக் கேட்கிறோம். அதன் ஆழ்ந்த அர்த்தத்தில் நம்மை மறக்கிறோம். நல்வழி நடத்தி, நற்பணிகளை செய்திட உதவும் வரிகளை நாம் மெய்மறந்து கேட்டு ரசிக்கிறோம். பழையன மட்டுமல்ல, புதிவற்றுள்ளும் பல பாடல்களின் வரிகள் நல்ல கவிதை நயம் கொண்டு விளங்குகின்றன.
ஆனால், இந்தப் பாடல்களில் பின்னணியில் ஒலிக்கும் இசையெனும் ஒன்றை நீக்கி விட்டால், மீதம் இருப்பது என்ன, நல்ல கவிதைகள் தானே? அப்படியானால் இசையில்லா பாடல்வரிகள் கவிதைகளுக்கு ஒப்பானதுதானே? நல்ல இசைதானே கவிதைகளையும் ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறது.....?
- பல பரிமாணங்களைத் தாண்டி வீர நடை போட்டுக்கொண்டிருப்பது இசையே. அனைத்துலக ரீதியில் இதை நாம் காணலாம். ஜேஸ், கிட்டார், ட்ரம்ஸ், ஃ புளுட் எனவும், சித்தார், வீணை என பல மேடைக் கச்சேரிகளை நாம் காண்கிறோம். கல்யாண சுப நாட்களில் இன்னமும் நமக்கு வழக்கத்துக்கு வருவது நாயனக் காரர்களின் இசை மழைதான். இவை மட்டுமல்ல, தற்போது நோய்களை தீர்க்கவும் இசைகள் உதவுகின்றன. சாதாரண தலைவலியில் இருந்து தீவிரமான தாக்குதலுக்கு உள்ளான நோய்களுக்கும் அவற்றுக்கேற்றாற்போல் இசையை கொண்டே குணப்படுத்தும் சிகிச்சை முறைகளும் நடமுறையில் உள்ளன. இவற்றுக்கு வார்த்தைகள் இல்லை. வார்த்தைகளுக்கும் அப்பால் நம்மை கொண்டு செல்லும் இசைக்கு அதன் சிறப்பு இடத்தை தந்து தானே ஆகவேண்டும்.
- கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஜேம்ஸ் பாண்ட், மிஷன் இம்பாஸிபள், ஹாவாய் 5-0 இன்னும் மற்ற பல தலைப்பு இசைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பலரையும் தன்பால் வசீகரித்து வருகின்றன. இவற்றுக்கு வார்த்தைகள் இல்லை.
- மகுடிக்கு மயங்கி ஆடுவதாக சொல்கிறார்களே, அந்த இனிய இசைக்கு பாம்பு மயங்குகிறதோ இல்லையோ, நாம் மயங்கி விடுகிறோம் பல நேரங்களில். இது போன்ற இன்னும் பல வாத்தியங்களுக்கு வார்த்தைகள் தேவை இல்லை.
- மொழிப் படங்களில் சில காட்சிகளுக்கேற்ப வார்த்தைகள் முக்கியமாகின்றன. இதுவும் தமிழர்களுக்கு, ஹிந்திக்காரர்களுக்கு, ஆங்கிலேயர்களுக்கு என குறுகிய கண்ணோட்டத்தில் தான். பொதுவென வந்திடும் போது, நாம் ஹிந்திப் பாடல்களை ரசிக்கிறோம், ஆங்கிலப் பாடல்களை ரசிக்கிறோம். நம்மைப் போல அவர்களும் நம் மொழிப் பாடல்களை ரசிக்கிறார்கள். இங்கும் நாம் வார்த்தைகளை விளங்கிக் கொண்டு ரசிப்பதில்லை.
இது போல இன்னும் பல காரணங்கள் இருக்கலாம். நினைவுக்கு வரும் போது, நண்பர்கள் இங்கே தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.
காரசாரமான கருத்துக்கள் இல்லாவிட்டாலும், துணிந்து எதிர் கருத்துக்களை பதிவிட்ட என் இனிய நண்பர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
''இசையால் எதுவும் வசியமாகும், இதுவே இசையின் மகத்துவமாகும்'' என நான் தினமும் ஹம்மிங்கில் பாடுவதை தனது 'போய்ண்டாக' பதிவு செய்த ஷாமளாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
|
Wednesday, 3 December 2014
பாடல் வரிகளா, இசையா?
Wednesday, 22 October 2014
Saturday, 12 July 2014
Saturday, 5 July 2014
Wednesday, 2 July 2014
Tuesday, 1 July 2014
Subscribe to:
Posts (Atom)